பேரறிவாளன் விடுதலை குறித்து சிபிஐ

பேர­றி­வா­ளனை விடு­தலை செய்­வது தொடர்­பாக தமி­ழக ஆளு­நர்­தான் முடி­வெ­டுக்க வேண்­டும் என சிபிஐ தெரி­வித்­துள்­ளது.

இந்த விவ­கா­ரத்­தில் சிபிஐ மேற்­கொண்ட விசா­ரணை தொடர்­பான தக­வ­லைக் கேட்டு ஆளு­நர் அலு­வ­ல­கத்­தில் இருந்து எந்­தக் கடி­த­மும் வர­வில்லை என­வும் சிபிஐ தெளி­வு­ப­டுத்தி உள்­ளது.

முன்­னாள் பிர­த­மர் ராஜீவ் கொலை வழக்­கில் தண்­டனை பெற்­றுள்ள பேர­றி­வா­ளன் உள்­ளிட்ட ஏழு பேரை விடு­தலை செய்­ய­வேண்­டும் எனும் கோரிக்கை வலுத்து வரு­கிறது. குறிப்­பாக பேர­றி­வா­ளன் விடு­தலை செய்­யப்­பட வேண்­டு­மென விஜய் சேது­பதி, ஆர்யா உள்­ளிட்ட நடி­கர்­களும் குரல் கொடுத்­துள்­ள­னர்.

தம்மை விடு­விக்­கக் கோரி பேர­றி­வா­ளன் உச்­ச­ நீ­தி­மன்­றத்­தில் மனுத்­தாக்­கல் செய்­துள்­ளார். இந்த வழக்­கின் விசா­ரணை இன்று நடை­பெற உள்­ளது.

இந்­நி­லை­யில் சிபிஐ தரப்­பில் பதில் மனு­தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

அதில், ராஜீவ் கொலை சதி­யில் பேர­றி­வா­ள­னின் பங்கு உச்­ச ­நீ­தி­மன்­றத் தீர்ப்­பில் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது என்­றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மேலும், பேர­றி­வா­ளனை விடு­விக்­கப் பரிந்­து­ரைக்­கும் தமி­ழக அர­சின் தீர்­மா­னம் மற்­றும் அவ­ரது கருணை மனு குறித்து ஆளு­நர் முடி­வெ­டுக்­கா­மல் இருப்­ப­தற்­கும் சிபி­ஐக்­கும் எந்­த­வி­தத் தொடர்­பும் இல்லை என்று அந்த அமைப்பு திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளது.

இந்த விவ­கா­ரம் தொடர்­பாக மேற்­கொண்ட விசா­ரணை குறித்து எந்­த­வி­தத் தக­வ­லை­யும் வெளி­யிட இய­லாது என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!