கரையோரம் ஒதுங்கிய அரியவகை கடற்பன்றி

1 mins read
428fce22-1621-49d7-8b96-8337cb2665f8
கோடியக்கரை கடற்கரையில் அரிய வகை கடற்பன்றி இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. பெரும்­பா­லும் சீனா, கொரியா நாடு­களை ஒட்­டிய மஞ்­சள் கட­லி­லும் சீனா­வின் யாங்சி ஆற்­றி­லும் அதி­க­மாக வாழக் கூடி­யவை இவை என்­ப­தும் தமி­ழக கடற்­ப­கு­தி­யில் இவ்­ வி­னம் காணப்­ப­டு­வது அரிது என்றும் கூறப்படுகிறது. படம்: தமிழக ஊடகம் -

நாகை மாவட்­டம், வேதா­ரண்­யத்தை அடுத்த கோடி­யக்­கரை கடற்­கரையில் அரி­ய­வகை கடற்­பன்றி இறந்த நிலை­யில் கரை ஒதுங்­கி­யது ஞாயி­றன்று தெரி­ய­வந்­தது.

இத்தக­வலை அடுத்து சதீஷ் தலை­மை­யி­லான கோடி­யக்­கரை வனத்­து­றை­யினர் கடற்பன்றி இறந்துள்ள இடத்துக்குச் சென்று பாா்வையிட்­டனா். விசா­ர­ணை­யில் அது அரி­ய­வகை பாலூட்டி உயி­ரி­ன­மான கடற்­பன்றி என்­பது தெரி­ய­வந்­தது.

சுமாா் 4 அடி நீளம், 60 கிலோ எடை­யில் இருந்த இந்தக் கடற்­பன்றியை கால்­நடை மருத்­துவா் செந்­தில் தலை­மை­யி­லான குழு­வினா் உடற்­கூ­றாய்வு செய்­தனா்.

இந்தக் கடற்­பன்றி கடல் சீற்­றத்­தால் இப்­ப­கு­திக்கு வந்­தி­ருக்­க­லாம் என்றும் பெரிய படகு அல்­லது கப்­ப­லின் விசி­றி­யில் சிக்கி வால்­ப­குதி துண்­டிக்­கப்­பட்­ட­தால் கடற்­பன்றி உயி­ரி­ழந்­தி­ருக்­க­லாம் எனவும் மருத்­துவா் தெரி­வித்தாா்.

ஆய்­வுக்குப் பிறகு கடற்­பன்­றி­யின் சட­லம் கடற்­க­ரை­யில் புதைக்­கப்­பட்­டது.

பாலூட்டி இன­மான கடற்­பன்­றி­களில் கோடி­யக்­க­ரை­யில் கரை ஒதுங்­கி­யது துடுப்­பில்லா கடற்­பன்றி வகை­யைச் சேர்ந்தது. ஃபின்லெஸ் போா்பாய்ஸ் என அழைக்­கப்­படும் இந்த இன கடற்­பன்­றி­களைப் பன்­னாட்டு இயற்­கைப் பாது­காப்­புச் சங்­கம் அழிய வாய்ப்­புள்ள அரிய இன­மாக குறிப்­பிட்­டுள்­ளது.