புதுவையில் முதல்வர் ஆய்வு; நிவாரண நிதி வழங்க முடிவு

நிவர் புய­லால் பாதிக்­கப்­பட்ட பல்­வேறு பகு­தி­க­ளை­யும் நேரில் சென்று பார்­வை­யிட்­டார் புதுவை முதல்­வர் நாரா­ய­ண­சாமி. அவ­ரு­டன் அரசு அதி­கா­ரி­களும் உடன் சென்­றி­ருந்­த­னர்.

புயல் பாதிப்பு குறித்து மத்­திய அர­சி­டம் நிவா­ர­ணம் கேட்­கப்­படும் என்­றும் தெரி­வித்­துள்ள முதல்­வர் நாரா­ய­ண­சாமி, புதுவையில் புயல் பாதிப்­பைக் கணக்­கெ­டுத்த பிறகு நிவா­ர­ணம் வழங்­கு­வது குறித்து முடிவு செய்­யப்­படும் என்றார்.

புது­வை­யில் புயல் பாதிப்­பு­களை நேரில் பார்­வை­யிட்டு ஆய்வு செய்த முதல்­வர் வே. நாரா­ய­ண­சாமி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறு­கை­யில், “புதுச்­சே­ரி­யில் கடந்த 24 மணி­நே­ரத்­தில் 23 செ.மீ. அள­வுக்கு கன­மழை பெய்­துள்­ளது. உயி­ரி­ழப்பு பற்­றிய தக­வல் எது­வும் இல்லை. இது­போன்ற கன­மழையை நாங்­கள் இது­வரை கண்­ட­தில்லை. அடுத்த 12 மணி­ நேரத்தில் நக­ரில் மின் இணைப்பு மீண்­டும் திரும்­பும்.

“இந்த நிவர் புய­லைத் தொடர்ந்து அரசு, தனி­யார் பள்­ளி­க­ளுக்கு வரும் 28ஆம் தேதி வரை விடு­முறை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

“மீன­வர்­க­ளின் பட­கு­கள், வலை­கள் எப்­படி பாதிக்­கப்­பட்­டுள்­ளன என்­பது குறித்தும் கணக்­கெ­டுப்பு எடுக்கப்படும்.

“இரவு நேரத்­தில் புயல் தாக்­கி­ய­தால் மக்­கள் அனை­வ­ரும் வீட்­டுக்­குள்­ளேயே இருந்­ததால் எந்­த­வித உயிர்ச்­சே­த­மும் ஏற்­ப­ட­வில்லை. புயல் பாதிப்பு குறித்து கணக்­கெடுப்பு நடத்­திய பின்­னர் நிவா­ர­ணம் குறித்து முடிவு செய்­யப்­படும். நிவா­ரண முகாம்­களில் 2,000க்கும் மேற்­பட்­டோர் தங்கவைக்­கப்­பட்­டுள்­ள­னர்,” என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!