தோழியே சித்தியானதால் தந்தையைக் கொன்றார்

தோழியே சித்தியானதால் தந்தையைக் கொன்றார்

1 mins read
f8bc97a6-f4e1-4b05-b788-364c5f54eb88
கொலை செய்யப்பட்ட தங்கராஜ். படம்: தமிழக ஊடகம் -
Google News Preferred Icon

பள்ளியில் தன்னுடன் பயின்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்ட தந்தையை மகனே வெட்டிக்கொன்ற சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்தது.

தென்காசி மாவட்டம், கடையத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ், 70. இவருக்கு மணமாகி வெள்ளையம்மாள் என்ற மனைவியும் திருக்குமரன், 43, எனும் மகனும் உள்ளனர்.

இருப்பினும், திருக்குமரனுடன் பயின்ற சண்முகசுந்தரி என்பவரை மணந்துகொண்ட தங்கராஜ், கடந்த 15 ஆண்டுகளாக அவருடனேயே வசித்து வந்தார்.

அத்துடன், தன் பெயரில் இருந்த 40 ஏக்கர் நிலத்தில் 25 ஏக்கரை சண்முகசுந்தரியின் பெயருக்கு தங்கராஜ் எழுதி வைத்துவிட்டார்.

தோழியே சித்தியானதாலும் சொத்து கைவிட்டுப்போனதாலும் தங்கராஜ் கடும் கோபத்தில் இருந்தார்.

இதன் தொடர்பில், தந்தை-மகன் இடையே மீண்டும் தகராறு வெடிக்க, மறைத்து வைத்திருந்த அரிவாளால் தங்கராஜை வெட்டிக் கொன்றார் திருக்குமரன். பின்னர், பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார்.

குறிப்புச் சொற்கள்