வடையில் 'பிளேடு'

வடையில் 'பிளேடு'

1 mins read
6a294203-c522-4fe7-91fa-b6362b1c745f
படங்கள்: தமிழக ஊடகம் -
Google News Preferred Icon

நிலக்கோட்டையில் தேநீர்க்கடை ஒன்றில் வாங்கிய பருப்பு வடையில் முழு 'பிளேடு' இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறை துணை ஆய்வாளர், அது குறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்பு அலுவலர் அந்தத் தேநீர்க் கடைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, எச்சரிக்கைக் கடிதம் வழங்கினார்.

வடை தயாரிக்கப் பயன்படுத்திய மாவு, பருப்பு, எண்ணெய் ஆகியனவும் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.