விமானிக்கு திடீர் மாரடைப்பு; 42 பேர் உயிர் தப்பினர்

சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் சி.விஜ­ய­பாஸ்­கர் பய­ணம் செல்ல இருந்த விமா­னத்­தின் விமா­னிக்குத் திடீ­ரென நெஞ்சு வலி ஏற்­பட்­டதை அடுத்து, உட­ன­டி­யாக அவரை திருச்­சி­யில் உள்ள பிர­பல தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­தித்­த­னர்.

விமா­னி­யைப் பரி­சோ­தித்த மருத்­து­வர்­கள், அவ­ருக்கு மார­டைப்பு ஏற்­பட்­டுள்­ள­தா­கக் கூறி னர். ஒரு­வேளை, விமா­னம் புறப்­பட்டு, நடு­வா­னில் செல்­லும் வேளை­யில் விமா­னிக்கு நெஞ்சு­வலி ஏற்­பட்­டி­ருந்­தால் மிகப்­பெ­ரிய அசம்­பா­வி­தம் ஏற்­பட்­டி­ருக்­கும்.

ஆனால், முன்­ன­தா­கவே விமா­னிக்கு ெநஞ்­சு­வலி ஏற்­பட்­ட­தால், தமி­ழக அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர் உள்­பட 42 பய­ணி­கள் அதிர்ஷ்ட ­வ­ச­மாக உயிர் தப்­பி­யுள்­ள­னர்.

இந்­தி­யா­வில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்­சை­யில் தமி­ழ­கம் தொடர்ந்து ஆறா­வது முறை­யாக முத­லி­டம் பெற்­றுள்­ளது.

இதற்­கா­கத் தமி­ழக சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் விஜ­ய­பாஸ்­க­ருக்கு மத்­திய சுகா­தா­ரத் துறை அமைச்­சர் ஹர்­ஷ­வர்­தன் விருது வழங்க இருந்­தார்.

காணொளி வழி நடை­பெ­று­வதாக இருந்த நிகழ்ச்­சி­யில் சென்­னை­யில் இருந்­த­படி கலந்­து­கொள் வதற்­காக விஜ­ய­பாஸ்­கர் திருச்சி விமான நிலை­யம் வந்­தார்.

நேற்று முன்­தி­னம் காலை 8.45 மணிக்கு புறப்­பட வேண்­டிய இண்­டிகோ விமா­னம் கடைசி நேரத்­தில் தனது பய­ணத்தை ரத்து செய்­வ­தாக அறி­வித்­தது.

அதை­ய­டுத்து, உட­ன­டி­யாக புதுக்­கோட்டை திரும்­பிய அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர், காணொ­ளிக் காட்சி மூலம் மத்­திய அமைச்­ச­ரி­டம் விரு­தைப் பெற்­றுக்­கொண்­டார். இந்நிலையில், விமா­னம் ரத்து செய்­யப்­பட்­ட­தற்­கான கார­ணம் இப்போது தெரியவந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!