கொவிட்-19: தடுப்பு மருந்து பரிசோதனைக்கு உட்பட்டு பக்க விளைவெனக் கூறியவரிடம் ரூ.100 கோடி கோர சீரம் முடிவு

கொவிட்-19: தடுப்பு மருந்து பரிசோதனைக்கு உட்பட்டு பக்க விளைவெனக் கூறியவரிடம் ரூ.100 கோடி கோர சீரம் முடிவு

2 mins read
a45c4f16-7a6b-4bed-93c3-3ef817df7a52
படம்: ராய்ட்டர்ஸ் -

கொவி­ஷீல்டு தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­ட­தால் மோச­மான நரம்பு, உள­வி­யல் பிரச்­சி­னை­களுக்கு ஆளாகி, அதன் கார­ண­மாக தனது உடல்­ந­லம் பெரிதும் பாதிக்­கப்­பட்­ட­தா­கக் கூறி ரூ.5 கோடி இழப்­பீடு கோரி­யுள்­ளார் சென்னை தன்னார்வலர் ஒரு­வர்.

இதற்குப் பதி­ல­டி­யாக, "பொய்­யான புகார்­களை முன்­வைத்­துள்ள ஆட­வ­ரி­டம் ரூ.100 கோடி இழப்­பீடு கேட்டு அவ­தூறு வழக்கு தொட­ரப்­படும். தன்­னார்­வ­லரின் புகாரில் உள்­நோக்­கம் உள்ளது," என்று சீரம் இந்­தியா நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

மத்­திய அர­சின் அனு­ம­தி­யு­டன் சென்னை ராமச்­சந்­திரா மருத்­து­வ­மனை­யில் கொவி­ஷீல்டு பரி­சோ­தனை நடை­பெற்­றது. இதில் பங்­கேற்ற சென்­னை­யைச் சேர்ந்த 40 வயது தன்­னார்­வ­லர் ஒரு­வ­ருக்­கும் கடந்த மாதம் 1ஆம் தேதி கொவிட் மருந்து பரிசோதிக்கப்பட்டது.

ஆனால், இந்தத் தடுப்­பூ­சியால் தனக்கு கடு­மை­யான நரம்பு, உள­வி­யல் உள்ளிட்ட உடல்­நலப் பாதிப்பு கள் ஏற்­பட்­ட­தை­ய­டுத்து ரூ. 5 கோடி ரூபாய் இழப்­பீடு கோரி நோட்­டீஸ் அனுப்­பி­யி­ருந்­தார்.

இந்நிலை­யில், சீரம் நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், "தன்­னார்­வ­ல­ரின் மருத்­துவ நிலை குறித்து அனு­தா­பப்படுகிறோம். தன்­னார்­வ­ல­ரின் உடல் நலப் பாதிப்­புக்­கும் தடுப்பு மருந்து பரி­சோ­த­னைக்கும் முற்­றி­லும் எந்த தொடர்­பும் கிடை­யாது. தற்­போது விடுக்­கப்­பட்­டுள்ள நோட்­டீஸ் தவ­றான கருத்­து­க­ளை­யும் உள்­நோக்­கத்­தை­யும் கொண்­டது. தன்­னார்­வ­லர் தனக்கு ஏற்­பட்ட உடல்நலப் பாதிப்பை கொரோனா தடுப்பு மருந்து பரி­சோ­த­னை­யு­டன் தவ­றாகத் தொடர்­பு­ப­டுத்­து­கி­றார்.

"ஏனெ­னில், உடல்நலப் பிரச்­சி­னை­கள் தடுப்­பூசி சோத­னை­யால் ஏற்­ப­ட­வில்லை என மருத்­து­வக் குழுவினர் தன்­னார்­வ­ல­ரி­டம் விளக்­கிய போதி­லும், நிறு­வ­னத்­தின் நற்­பெ­ய­ருக்கு களங்­கம் ஏற்­ப­டுத்­தும் நோக்­கில் செயல்பட்டுள்ளதால், ரூ. 100 கோடி இழப்­பீடு கோர உள்­ளோம்" என்று கூறப்பட்­டுள்­ளது.

தடுப்பூசி சோதனைக்கு உட்படும் ஒருவர் அதன் விளைவுகளை தாமே ஏற்கவேண்டும் என அந்த ஆடவ ருக்கு மருத்துவக் குழுவினர் முன்பே அறிவுறுத்தி இருந்ததாகவும் சீரம் நிறு­வ­னம் கூறியுள்­ளது.

குறிப்புச் சொற்கள்