நடைப்பயிற்சி, குளியல் முடித்து 'ஃபில்டர்' காபி பருகும் யானை; வியக்கும் மக்கள்

தூத்­துக்­கு­டி­யில் மனி­தர்­க­ளைப் போலவே கோவில் யானை ஒன்று இட்லி, வடை சாப்­பிட்­டு­, 'ஃபில்டர் காபி' அருந்­தும் காெணாளிப் பதிவு சமூக ஊடகத்­தில் வேக­மாகப் பரவி வரு­கிறது.

தூத்­துக்­குடி மாவட்­டம், ஆழ்­வார்­தி­ரு­ந­கரியில் உள்ள ஆதி­நா­தர் ஆழ்­வார் கோவி­லில் ஆதி­நா­யகி என்ற யானை உள்­ளது.

இந்த யானை­யைப் பரா­ம­ரித்து வரும் பாகன், அதைத் தின­மும் காலை­யில் நடை­ப்ப­யிற்­சிக்கு அழைத்­துச்­செல்­வ­தும், அதன்­பி­றகு அதைக் குளிக்­க­வைத்து அழைத்து வரு­வ­தும் வழக்­கம்.

அப்­படி ஆல­யத்­திற்குத் திரும்­பும் வழி­யில், அங்­குள்ள உண­வ­கத்­தில் பாகன் தான் மட்­டும் சாப்­பிட்டு, 'ஃபில்டர் காபி' அருந்­தா­மல் அந்த யானைக் கும் வாங்­கிக்­கொ­டுப்­பார்.

உண­வ­கத்­தில் யானைக்கு வாங்­கிக்­கொ­டுக்­கும் 'ஃபில்டர் காபி' சூடாக இருப்­ப­தால் அதை நன்கு ஆற்றி யானைப்­பா­கன் யானைக்கு கொடுக்கிறார். அந்த யானையும் 'ஃபில்டர் காபியை ஆர்­வத்துடன் விரும்­பிப் பரு­குகிறது. இந்தக் காட்­சி­கள் இணை­யத்­தில் பரவி வரு­கின்­றன.

கோவில் யானை 'ஃபில்டர் காபி குடிப்­பதை அப்­ப­குதி மக்­கள் வியந்து பார்ப்­பதையும் காண­மு­டி­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!