திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை தலைநிமிரச் செய்யும் வகையில், தனது பிரசாரப் பயணத்தைத் தொடங்கி உள்ளார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்ய உள்ளவர், இருமுறை கைது செய்யப்பட்ட போதிலும் தனது பிரசாரப் பயணத்தை விடாது தொடர்ந்து வருகிறார். திருவாரூர் மாவட்டத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உதயநிதி, திருவாரூர் மாவட்ட எல்லைப்பகுதியான எடையூரில் வயல்வெளியில் சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அவர்களின் பணிகள், குறைகள், பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். படம்: டுவிட்டர் ஊடகம்
பெண் விவசாயிகளின் குறைகளைக் கேட்டறியும் உதயநிதி
1 mins read
படம்: தமிழக ஊடகம் -

