கட்சியில் சேர்ந்ததுமே பொதுச்செயலாளராகிறார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோ‌ஷ் பாபு

கட்சியில் சேர்ந்ததுமே பொதுச்செயலாளராகிறார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோ‌ஷ் பாபு

1 mins read
32aa1a81-8515-41b1-bc2b-b6892e4c83f4
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோ‌ஷ் பாபு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். படம்: ஊடகம் -

சென்னை: முன்­னாள் ஐஏ­எஸ் அதி­காரி சந்­தோ‌ஷ் பாபு மக்­கள் நீதி மய்­யம் கட்­சி­யில் இணைந்­துள்­ளார்.

நேற்று மக்­கள் நீதி மய்­யம் கட்­சி­யின் தலை­வர் கமல்­ஹா­ச­னின் முன்­னி­லை­யில் அவர் தன்னை அக்­கட்­சி­யில் இணைத்­துக்­கொண்­டார்.

கட்­சி­யில் இணைந்த உட­னேயே அவரை கட்­சி­யின் பொதுச்­செ­ய­லா­ள­ராக அறி­வித்­துள்­ளார் அக்­கட்­சி­யின் தலை­வர் கமல்­ஹா­சன்.

ஐ.ஏ.எஸ் அதி­கா­ரி­யாக பணி­யாற்­றிய சந்­தோஷ் பாபு பணி ஓய்வு பெறு­வ­தற்கு எட்டு ஆண்­டு­கள் உள்ள நிலை­யில் சில மாதங்­க­ளுக்கு முன்பு அவர் விருப்ப ஓய்வு பெற்­றார்.

ஐ.டி துறை­யின் முதன்மை செய­லா­ள­ரா­க­வும், சிவ­கங்கை மற்­றும் கிருஷ்­ண­கிரி மாவட்ட ஆட்­சி­ய­ரா­க­வும் அவர் ஆற்­றிய பங்­க­ளிப்­பு­கள் மிக­வும் குறிப்­பி­டத்­தக்­கவை. அவர் ஒரு தகு­தி­வாய்ந்த மருத்­து­வர். மேலும் அவர் லண்­டன் ஸ்கூல் ஆஃப் எக்­க­னா­மிக்ஸ், ஹார்­வர்ட் பல்­க­லைக்­க­ழ­கம் மற்­றும் சிங்­கப்­பூ­ரின் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கம் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து பட்­டம் பெற்­ற­வர். இரு­பத்­தைந்து ஆண்­டு­க­ளுக்­கும் மேல் ஆட்­சிப் பணி அனு­ப­வ­முள்ள ஐஏ­எஸ் அதி­காரி சந்­தோஷ் பாபு குழந்தை தொழி­லா­ளர் ஒழிப்­புக்­காக தமி­ழக அர­சின் சிறந்த மாவட்ட ஆட்­சி­யர் விருது போன்ற பல விரு­து­க­ளைப் பெற்­றுள்­ளார்.

மேலும், அவ­ருக்கு "தமி­ழ­கத்­தின் பெருமை" என்ற விரு­தும் வழங்­கப்­பட்­டது. 2017ம் ஆண்­டில், இவரது தலைமையில் சென்னை பூம்புகார் நிலையம தேசிய மின்-ஆளுகை விரு­தை­யும், ஸ்கோச் ஸ்மார்ட் கவர்­னன்ஸ் பிளாட்­டி­னம் விரு­தை­யும் வென்­றது. சந்­தோஷ் பாபு வகித்த ஒவ்­வொரு பத­வி­யி­லும், தனது அய­ராத உழைப்­பா­லும் முயற்­சி­யா­லும் கிரா­மப்­புற மக்­க­ளின் வாழ்க்­கை­யில் பல மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­ய­வர்.