சுடச் சுடச் செய்திகள்

விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் மீது அக்கட்சியைச் சேர்ந்த மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பாலியல் புகார்

விழுப்­பு­ரம் மாவட்­டத்­தின் பார­திய ஜனதா கட்­சி­யின் தலை­வர் வி.ஏ.டி.கலி­வ­ர­தன், தன்னை ஓர் அறையில் அடைத்து வைத்து பல­முறை பாலி­யல் வன்­கொ­டுமை செய்­த­து­டன் கொலை மிரட்­டல் விடுத்­த­தாக அக்­கட்­சி­யின் மக­ளிர் அணி­யின் பொதுச் செய­லா­ளர் காயத்ரி கட்­சித் தலை­மைக்­குப் புகார் அளித்­துள்­ளார்.

மக­ளிர் அணி பொதுச் செய­லா­ளர் காயத்ரி என்­ப­வர் கட்­சி­யின் தலை­மைக்கு அளித்த புகார் கடி­தம் சில தினங்­க­ளுக்கு முன்பு வெளி­யா­னது.

அந்­தக் கடி­தத்­தில், “மாவட்ட பாஜக தலை­வ­ரான வி.ஏ.டி கலி­வ­ர­தன் கட்­சி­யில் தனக்கு பதவி கொடுப்­ப­தா­கக் கூறி ரூ.5 லட்­சம் பணம் வாங்­கிக்­கொண்­ட­து­டன், தன்னை பல­முறை பாலி­யல் வன்­கொ­டுமை செய்­தார். அதைப்­பற்றி வெளி­யில் சொன்­னால் என்னை கொலை செய்­து­வி­டு­வ­தாக மிரட்­டு­கி­றார்” என்று எழுதி காயத்ரி என்ற பெய­ரில் கையெ­ழுத்­தி­டப்­பட்­டி­ருந்­தது.

ஊட­கங்­களில் செய்­தி­கள் வெளி­வந்­த­போ­தும், அந்­தக் கடி­தம் குறித்து காயத்ரி அப்­போது எந்­தக் கருத்­தை­யும் தெரி­விக்­காத நிலை­யில், அது பொய்ப் புகார் என்று ஊட­கங்­க­ளுக்கு பேட்­டி­ய­ளித்­தி­ருந்­தார் வி.ஏ.டி கலி­வ­ர­தன். அதே­போல காயத்­ரி­யும், கலி­வ­ர­த­னும் பேசிக்­கொள்­வ­தாக ஆடியோ ஒன்று வெளி­யா­னது.

இந்த நிலை­யில் காயத்ரி, நேற்று வி.ஏ.டி.கலி­வ­ர­தன் தனக்கு கொலை மிரட்­டல் விடுக்­கி­றார் என்று விழுப்­பு­ரம் மாவட்ட எஸ்.பியி­டம் புகார் அளித்­தி­ருக்­கி­றார். அந்த புகார் கடி­தத்­தில், “தற்­போது விழுப்­பு­ரம் மாவட்ட பா.ஜ.க தலை­வ­ராக இருக்­கும் வி.ஏ.டி. கலி­வ­ர­தன், எனக்கு கள்­ளக்­கு­றிச்சி மாவட்ட மக­ளிர் அணித் தலை­வர் பதவி வாங்­கித் தரு­கி­றேன் என்று கூறி என்­னி­டம் ரூ. 5 லட்­சம் பணம் வாங்கி ஏமாற்­றி­விட்­டார்.

முடக்­கு­வாத சிகிச்­சைக்­காக நான் சென்னை சென்­று­கொண்­டி­ருந்­த­போது, என்னை வழி­ம­றித்து, நல்ல மருத்துவரிடம் கூட்டிச் செல்வதாகக் கடத்­திச்­சென்று தெரி­யாத ஒரு இடத்­தில் என்னை அடைத்து வைத்­தார். இரண்டு மணி நேரத்­திற்குப் பிறகு அந்த அறைக்கு வந்த வி.ஏ.டி கலி­வ­ர­தன் `இப்போ என் ஆசைக்கு இணங்­க­வில்லை என்­றால் உன்­னை­யும் உன் குடும்­பத்­தை­யும் கொலை செய்­து­வி­டு­வேன்’ என்று மிரட்­டி­னார்.

“அதன்­பி­றகு என்னை பாலி­யல் வன்­முறை செய்த அவர், இரண்டு நாள்­கள் என்னை அடைத்­து­வைத்து பல­முறை பாலி­யல் வன்­கொ­டுமை செய்­தார்.

“அது­மட்­டு­மல்­லா­மல் அத­னைப் படம் எடுத்து வைத்­தி­ருப்­ப­தா­க­வும், அத­னால் அவர் கூப்­பி­டும்­போ­தெல்­லாம் அவ­ரது ஆசைக்கு இணங்க வேண்­டும் என்­றும் இல்­லை­யென்­றால் வீடி­யோவை அனை­வ­ருக்கும் அனுப்­பி­வி­டு­வேன் என்­றும் மிரட்­டி­னார். நான் கொடுத்த பணத்­தை­யும் திருப்­பிக்கொடுக்­காத அவர், பாஜக-வில் இப்­போது ரொம்ப பலமா இருக்­கேன்.

“என்னை யாரும் ஒன்னும் செய்துவிட முடியாது. மறுபடியும் என்னிடம் பணம் கேட்டால் குடும்பத்தையே கொலை செய்துவிடுவதாக தொடர்ச்சியாக மிரட்டி வரும் அவர் மீது நடவடிக்கை எடுங்கள்,” என்று புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon