பாம்பன், கன்னியாகுமரி இடையே புரெவி; கடலில் 3,000 மீனவர்கள் தவிப்பு

புரெவி புயல் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தால் அர­பிக்­க­ட­லில் மீன் பிடிப்­பில் ஈடு­பட்­டுள்ள 3,000 மீீன­வர்­களை மீட்க தமி­ழக மீன்­வ­ளத் துறை அதி­கா­ரி­கள் கர்­நா­டக மாநி­லம், மங்­க­ளூருக்கு விரைந்­துள்­ள­னர்.

பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையில் புரெவி புயல் இப்போது இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனத்த மழை பொழிந்து வருகிறது.

நிவர் புய­லைப் போலவே புரெவி புய­லும் வந்த இடம் தெரி­யா­மல் மக்­க­ளுக்கு எந்த ஒரு பாதிப்­பை­யும் ஏற்­ப­டுத்­தா­மல் சென்றுவிட­வேண்டும் என்­பதே மக்கள் பலரின் எதிர்­பார்ப்­பாகவும் உள்­ளது.

கன்­னி­யா­கு­மரி, தூத்துக்­குடி மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த நூற்றுக்­கணக்­கான விசைப்­ப­டகுகளில் 3,000 மீன­வர்­கள் உள்­ள­னர்.

நிவர் புய­ல் பாதிப்புக்குப் பிறகு கட­லுக்குச் சென்­ற­ இவர்கள், 15 நாட்­கள் வரை கட­லில் தங்கி, மீன் பிடித்துவிட்டு கரை திரும்­பு­வர்.

தற்­போது, புரெவி புயல் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தால் மீன் பிடிப்­பில் ஈடு­பட்­டுள்ளவர்­களைக் கரை திரும்பும்படி கூறப்பட்டுள்ளது.

கன்­னி­யா­கு­மரி ஆட்­சி­யர் அர­விந்த் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறுைக யில், “புயல் எச்­ச­ரிக்­கையை அடுத்து இது­வரை 1,000க்கும் மேற்­பட்ட பட­கு­கள் கரை திரும்பிவிட்­டன. இன்­னும், 161 பட­கு­களில் உள்ள மீன­வர்­கள் கரை திரும்ப வேண்­டும். கட­லோர காவல் படை, மீன்­வ­ளத் துறை மூலம் அவர்களுக்கு தக­வல் தெரி­விக்­கப்­பட்டு, அரு­கில் உள்ள துறை­மு­கங்­களில் கரை ஒதுங்கும்படி கேட்­டுக்கொள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

“வங்கக் கடலில் உருவான புரெவி புயல் நாளை 4ஆம் தேதி கன்னியாகுமரி-பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

“இதையடுத்து, ­கு­மரி மாவட்­டத்தில் உள்ள தேங்­காய்­பட்­ட­ணம், தூத்­தூர், வள்­ள­விளை பகு­தி­யில் இருந்து 161 விசைப்­ப­ட­கு­களில் மீன்­பி­டிக்கச் சென்ற மீன­வர்­களை புயல் வரு­வ­தற்­குள் பிற மாநி­லங்­களில் உள்ள மீன்­பிடி துறை­மு­கங்­களில் கரை­சேர்ப்­ப­தற்­கான முயற்­சி­யில் மீன்­வ­ளத்­துறை அதி­கா­ரி­கள் ஈடு­பட்டு வரு­கி­ன்றனர்.

“கப்­பல்­படை, விமா­னப்­படை மூலம் லட்­சத்­தீவு, கர்­நா­டகா, கேரளா ஆழ்­க­டல் பகு­தி­யில் தவிக்­கும் மீன­வர்­க­ளுக்கு புயல் எச்­ச­ரிக்கை தக­வல்­களைக் கொண்டு சேர்க்­கும் முயற்சியும் நடந்து வரு­கிறது,” என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!