தெளிவான முடிவை அறிவிக்காவிடில் உயிரை விடுவேன் என ரஜினி ரசிகர் மிரட்டல்

அர­சி­ய­லுக்கு வரு­வேன் என்று சொல்லி நீண்ட நாட்­க­ளா­கி­யும் இன்­னும் நடி­கர் ரஜி­னி­காந்த் எந்த ஒரு தெளி­வான முடி­வை­யும் அறி­விக்­கா­மல் இழுத்­த­டித்து வரு­வ­தால், தனது உயிரை மாய்த்­துக் கொள்­ளப்போவ­தாக அவ­ரது ரசி­கர் ஒரு­வர் மிரட்­டல் விடுத்­துள்­ளார்.

ரஜி­னி­காந்­தின் அர­சி­யல் பிர­வே­சம் என்­பது தமி­ழக மக்­க­ளால் தொடர்ந்து பேசப்­பட்டு வரும் ஒரு விஷ­ய­மாகி வரு­கிறது.

இது­வரை அர­சி­யல் கட்சி எப்­போது தொடங்­கப்­படும் என்றோ, முழு­நேர அர­சி­யல் பிர­வே­சம் குறித்தோ ரஜினி எந்த ஓர் அறி­விப்­பை­யும் வெளி­யி­ட­வில்லை.

அண்­மை­யில் ெசன்­னை­யில் நடந்த ரஜினி மக்­கள் மன்­றத்­தின் மாவட்­டப் பொறுப்­பா­ளர்­கள் கூட்­டத்தில் பேசிய ரஜினி, “தனது அர­சி­யல் பிர­வே­சம் பற்­றிய முடிவை எவ்­வ­ளவு சீக்­கி­ரம் முடி­யுமோ, அவ்­வ­ளவு விரை­வில் அறி­விப்­பேன்,” என்று தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், தஞ்சை மாவட்­டம், பட்­டுக்­கோட்டை ரசி­கர் மன்ற நக­ரச் செய­லர் சத்­தி­ய­மூர்த்தி தனது டுவிட்­டர் பதிவில், “மக்­கள் தலை­வர் அர­சி­ய­லுக்கு வர­மாட்­டார் என்ற சூழ்­நிலை நில­வு­கிறது. அறி­விப்பு வர­வில்லை என்­றால் உயிரை விடு­வேன். என்­றும் மக்­கள் தலை­வர் வழி­யில்,” எனப் பதி­விட்­டி­ருந்­தார்.

அதன்­பின்­னர், சில மணி நேரத்­தில், “அனை­வ­ரும் மன்­னிக்க வேண்டும். மன உளைச்­ச­லால் இப்­படி ஒரு பதி­வைப் போட்­டு­விட்­டேன். தஞ்சை மாவட்­டத் தலை­வர் என்­னி­டம் பேசி, ‘தலை­வர் நிச்­ச­யம் அர­சி­ய­லுக்கு வரு­வார்’ என்ற நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளார். களப்­பணி செய்­த­வ­ருக்குத் தான் அந்த வலி தெரி­யும்,” எனப் பதி­விட்டு இருந்­தார்.

இதற்கிடையே, “ரஜினியுடனான என் போட்டி அரசியலிலும் தொட ரும். நாங்கள் திரைத்துறையில் போட்டியாளர்களாக மட்டுமே இருந்தோம்; பொறாமையாளர்களாக இருந்ததில்லை. அது, அரசியலிலும் தொடரும்,’’ என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!