தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

1 mins read
d8ba835b-1f7d-476b-b8b6-932833c162a1
படம்: தமிழக ஊடகம் -

தமது முதலாவது அனைத்துலக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இரண்டு விக்கெட்டுகளைச் சாய்த்த தமிழக வீரர் நடராஜனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் இந்தியா, ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற போட்டியில் நடராஜன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

"இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தமது அனைத்துலக கிரிக்கெட் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மேன்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன்" என்று முதல்வர் பழனிசாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்