திருச்சி விமான நிலையத்தில் 8.5 கிலோ தங்கம் பறிமுதல்; நூதன கடத்தல் முயற்சி

திருச்சி விமான நிலையத்தில் 8.5 கிலோ தங்கம் பறிமுதல்; நூதன கடத்தல் முயற்சி

1 mins read
da5dd9a9-022d-4266-81d2-17a3e30b53b8
-

துபாயிலிருந்து திருச்சிக்கு வந்த இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்களில் வந்த 8 பயணிகள் தங்கத்தை நூதன முறையில் கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 4.25 கோடி ரூபாய் என்று கூறப்பட்டது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக குறிப்பிட்ட சில வெளிநாடுகளுக்கு மட்டும் குறிப்பிட்ட நாள்களில் விமானச் சேவைகள் இயக்கப்படுகின்றன.

இதன்படி, துபாயிலிருந்து திருச்சி வந்த இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்களில் வந்த ஒரு பெண் உட்பட 8 பயணிகள் தங்கள் உடைகளிலும் உடைமைகளிலும் தங்கத்தை பசையாக மாற்றி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் தங்க பசையாக சுமார் 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. அதிலிருந்து 8.5 கிலோ தங்கம் பெறப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகையாக, கட்டியாக கொண்டு வருவதை விட பசையாக கொண்டு வரும் போது கண்டுபிடிப்பது சிரமம் என்றும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்