ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவஞ்சலி

ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவஞ்சலி

1 mins read
dfe0a0cf-032d-429f-b03d-7fc7321626a6
மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்கள் ெஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் ராமஜெயலிங்கம் மற்றும் அதிமுகவின் கட்சி நிர்வாகிகள். -

சென்னை: அதிமுக நிரந்தர பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி மாநிலம் எங்கும் பரவலாக அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி னர்.

சென்னை மெரினா கடற்கரை யில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்தனர்.

இதற்கிைடயே, அரியலூரில் ஜெயலலிதாவின் திருவுருப்படத் துக்கு அதிமுகவினர் நேற்று அஞ்சலி செலுத்தினர். ெஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் ராமஜெயலிங்கம் தலைமையில் அரியலூர் ஒற்றுமைத் திடலில் திரண்ட அதிமுகவினர், அங்கிருந்து அரியலூர் பேருந்து நிலையம் வரை அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள், அரசு தலைமைக் கொறடா அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெய லலிதா திருவுருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.