திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.4.25 கோடி மதிப்புள்ள 8.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக ராமநாதபுரம், இளையான்குடியைச் சேர்ந்தவர்கள் உள்பட 10 பேரிடம் அதிகாரிகள் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
துபாயிலிருந்து திருச்சிக்கு வந்த இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்களில் வந்த ஒரு பெண் உள்ளிட்ட 10 பயணிகள் தங்கள் உடைகளிலும் உடைமைகளிலும் தங்கத்தை கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். விமானப் போக்குவரத்து குறைந்துள்ள போதும் தங்கக் கடத்தல் தொடர்கிறது. பயணிகள் போல் வந்த கடத்தல்காரர்களிடம் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

