சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் பதவியேற்றுக்கொள்ளும் விழா நேற்று முன்தினம் நடந்தது.
இவ்விழாவில், ஒரு சுவாரசியமான விஷயமாக கணவன் மனைவியான முரளி சங்கர் குப்புராஜும் தமிழ்ச்செல்வி டி வலயபாளையமும் (படம்) நீதிபதிகளாக சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
இந்திய நீதித்துறை வரலாற்றில் கணவன்-மனைவியாக ஒரேநாளில் தம்பதிகள் நீதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்துகொள்வது இது இரண்டாவது முறை. இதற்கு முன்பு, நீதிபதி விவேக் பூரி, நீதிபதி அர்ச்சனா பூரி ஆகியோர் கடந்த ஆண்டு பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றங்களில் ஒரேநாளில் நீதிபதிகளாக பதவியேற்றனர்.
சென்னை: நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில், சென்னை உயர் நீதிமன்றத்தில் 13 பெண் நீதிபதிகள் இருப்பதற்கு துணை அதிபர் வெங்கையா நாயுடு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
"சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை நீதிமன்றத்தைப் பொறுத்தமட்டில் மொத்தம் 63 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். இதில் 13 பேர் பெண்கள் எனும்போது அவர்க ளுக்கு 21% வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது.
"நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகள் பணியாற்றும் நீதிமன்றமாக சென்னை உயர் நீதிமன்றம் உள்ளது. இது பெருமைக்கும் பாராட்டுக்கும் உரியது. உச்ச நீதிமன்றத்தில் உள்ள 33 நீதிபதிகளில் இருவர் மட்டுமே பெண்கள். இந்தியாவில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் 78 பெண் நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்," என்றார்.
சென்னை: நிவா், புரெவி புயல்களின் தாக்கத்தால் தமிழகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகள், விளைபயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
இந்தப் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழு ஒன்று நேற்று சென்னை வந்தது. மத்திய அரசுத் துறைகளைச் சோ்ந்த ஏழு அதிகாரிகள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.
இக்குழுவினர் இரு பிரிவுகளாகப் பிரிந்து புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
முதல் குழு இன்று ஞாயிறன்று தென் சென்னை, செங்கல்பட்டு ஆகிய இடங்களிலும் புதுச்சேரி, கடலூா், விழுப்புரம் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமையும் ஆய்வுகளை நடத்தவுள்ளது.
இரண்டாம் குழு, வடசென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்றும் வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் நாளையும் ஆய்வுகளை நடத்தும்.

