சென்னை: கொரோனா கிருமித்ெதாற்றைக் குணப் படுத்தும் தடுப்பூசி குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
எனினும், இந்தத் தடுப்பூசி தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாகவே போடப்படும் என முதல்வர் அறிவித்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
8 மாவட்டங்களில் ஒற்றை இலக்க பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமிப் பரவலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், எட்டு மாவட்டங்களில் இப் பாதிப்பு ஒற்றை இலக்கத் துக்கு குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளி யிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் புதிதாக 1,366 பேருக்கு கிருமி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 788,920 ஆக அதிகரித்துள்ளது.
"சென்னையில் மொத்த பாதிப்பு 217,204 ஆகியுள்ளது. இங்கு தொடா்ந்து 48வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் இப்பாதிப்பு பதிவாகியுள்ளது.
"ராமநாதபுரம், சிவகங்கை, விழுப்புரம், அரியலுார், கள்ளக்குறிச்சி, புதுக் கோட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை ஆகிய எட்டு மாவட்டங்களிலும் இப்பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் குறைந்துள் ளது," என குறிப்பட்டுள்ளது.

