இளநிலை மாணவர்களுக்கு இன்று முதல் கல்லூரி திறப்பு

இளநிலை மாணவர்களுக்கு இன்று முதல் கல்லூரி திறப்பு

1 mins read

சென்னை: தமி­ழ­கக் கல்­லூ­ரி­களில் இள­நிலை இறு­தி­யாண்டு பட்­டப்­படிப்­பைத் தொடர்ந்து வரும் மாண­வர்­க­ளுக்கு இன்று திங்­கட்கிழமை முதல் வகுப்­பு­கள் தொடங்­கப்­பட உள்ளது.

50% மாண­வர்­க­ளு­டன் சுழற்­சி­மு­றை­யில் வகுப்­பு­களை நடத்­த­வேண்­டும் என்று உத்­த­ர­விட்­டுள்­ள தமிழக அரசு, அதற்­கான வழி­காட்டி நெறிமுறை­களையும் வெளி­யிட்­டுள்­ளது.

இது­கு­றித்து தலை­மைச் செயலா் கே.சண்­மு­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், "வேளாண்மை, பொறி­யி­யல், கால்­நடை மருத்­து­வம், மீன்­வ­ளம், பாலிெடக்­னிக், உணவு மேலாண்மை, கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூ­ரி­களில் இறுதி யாண்டு கல்­விை­யப் பயி­லும் மாண­வா்­க­ளுக்கு டிசம்பர் 7ஆம் தேதி முதல் நேரடி வகுப்­பு­களை நடத்து வதற்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

"கட்­டுப்­பாட்­டுப் பகு­தி­களில் இருக்­கும் கல்­லூ­ரி­க­ளைத் திறக்­கவோ, அந்தப் பகு­தி­யில் வசிக்­கும் மாண­வா்­களைக் கல்­லூ­ரிக்கு வரும்படி அழைக்கவோ ­கூ­டாது.

"கல்­லூரி வளா­கங்­களில் முகக் ­க­வ­சம், தனி­நபா் இடை­வெளி, கிருமி­நா­சினியைப் பயன்படுத்து வதை மாண­வா்­களும் ஆசிரி யா்களும் பின்­பற்­ற­வேண்­டும்.

"அதே­போல், 50% மாண­வா்­க­ளு­டன் சுழற்சி முறை­யில் வாரத்­தில் 6 நாள்­கள் வகுப்­பு­களை நடத்­த­வேண்­டும்.

"நோய்த்­தொற்று அறி­குறி உள்ள வா்களைக் கல்­லூ­ரிக்­குள் அனு­ம­திக்­கக்­கூ­டாது.

"கல்­லூ­ரி­கள் திறக்­கப்­பட்­டா­லும் இணை­ய வகுப்­பு­க­ளை­யும் தொடர வேண்­டும்.

"விடு­தி­களில் ஓர் அறை­யில் ஒரு மாணவா் மட்­டுமே தங்­கி­யிருக்கவேண்­டும். வளா­கங்­க­ளைத் தூய்­மை­யாக வைத்­தி­ருக்கவேண்­டும் என்­பன உள்ளிட்ட கட்­டுப்­பா­டு­களைக் கட்­டா­யம் கல்வி நிறு­வ­னங்­கள் பின்­பற்ற வேண்­டும்," எனக் கூறப்பட்டுள்ளது.