சென்னையில் தொடர்ந்து பல வாரங்களாக கொேரானா கிருமி பாதிப்புக்காக சிகிச்சை ெபற்று வந்தவர்களின் எண்ணிக்கை 2%ஆக நீடித்து வந்த நிலையில், இப்போது 1% ஆகக் குறைந்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை ஏறக் குறைய 3,000 ஆகக் குறைந்து உள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பில் 1% ஆகும். அத்துடன், சென்னையில் 400க்கும் குறைவான மக்களே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக 217,542 பேருக்கு இப்பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 210,410 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். கொரோனா பாதித்தவர்களில் 3,257 பேர் பலியாகியுள்ளனர். இது 1.78% ஆகும்.
திருவிகநகர், அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு ஆகிய நான்கு மண்டலங்களில் 300க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், "தமிழகத்தில் கொரோனா தொற்றை மேலும் குறைக்க பொதுமக்களின் ஒத்து ழைப்பு தேவை. தொடர்ந்து அனைவரும் முகக்கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
"மழைக் காலம் என்பது சுகாதாரத்துறைக்கு பெரும் சவாலான ஒன்று. இந்தக் காலத்தில் எவ் வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

