முதுகில் தங்கத்தைக் கடத்தி வந்த மூன்று ஆடவர்கள் கைது

துபா­யில் இருந்து சென்­னைக்கு வந்த சிறப்பு விமானத்­தில் ரூ.15 லட்­சம் மதிப்­பி­லான 300 கிராம் தங்­கத்தை முது­கில் வைத்து கட்டுப் போடு­வது போல் போட்டு பய­ணி­கள் மூவர் கடத்தி வந்­த­னர்.

இதைப் பறி­மு­தல் செய்த சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள், பய­ணி­கள் மூவ­ரை­யும் கைது செய்து, அவர்­க­ளி­டம் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

சென்னை மீனம்­பாக்­கம் விமான நிலை­யத்­தில் வந்­தி­றங்­கிய பய­ணி­களை விமான நிலைய சுங்­கத்­துறை ஆணை­யர் ராஜன் சௌத்ரி தலை­மை­யி­லான சுங்க இலாகா அதி­கா­ரி­கள் தீவிரமாகக் கண்­கா­ணித்­த­னர்.

அப்­போது, சந்­தே­கப்­ப­டும்­ப­டி­யாக நடந்­து­கொண்ட ராம­நா­த­புரத்­தைச் சேர்ந்த முக­மது அனஸ், 27, சென்­னை­யைச் சேர்ந்த ஜும்­மா­கான், 47, முக­மது ரஃபி, 46, ஆகிய மூவ­ரை­யும் அதி­கா­ரி­கள் தனி அறைக்கு அழைத்­துச்­சென்று சோதித்­த­னர்.

அவர்­களில் இரு­வ­ரது முதுகு சற்று வீங்கி இருந்­தது குறித்து அதி­கா­ரி­கள் கேட்­ட­தற்கு, முது­கில் சுளுக்கு பிடித்­துக்­கொண்­ட­தால் கட்டுப் போட்­டுள்­ள­தா­கக் கூறி­னர். சந்­தே­கம் அடைந்த அதி­கா­ரி­கள் கட்­டைப் பிரித்­துப் பார்த்­த­போது, அதில் தங்­கக் கட்­டி­கள் இருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. மற்­றொ­ரு­வர் தனது கால்­சட்­டைக்­குள் மறைத்து வைத்து தங்­கத்­தைக் கடத்­தி­வந்­த­தும் தெரி­ய­வந்­தது.

துபாயில் இருந்து சென்னைக்கு முதுகில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 300 கிராம் தங்கம். இதன் மதிப்பு ரூ.15 லட்­சம் என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!