'எட்டு வழிச்சாலை நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம்'

1 mins read
6856f3fc-39b5-4c18-ba94-ccc0a9f7ec6b
-

நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு எட்டு வழிச்சாலை அவசியம் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்திருக்கிறார். இன்று திருவாரூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது வெளிநாடுகளில் குறைந்தபட்சமே 8 வழிச்சாலைதான் உள்ளது என்று குறிப்பிட்டார்.

விபத்து, கால விரயம், எரிபொருள் சேமிப்பு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலை விரிவாக்கம் அவசியம் என்று குறிப்பிட்ட திரு பழனிசாமி, தமிழக எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் எழுப்பிய சுற்றுச்சூழல் மாசு குறித்த அக்கறைகளுக்கும் பதிலளித்தார். "திமுக ஆட்சியில் 17 நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் கொண்டு வந்த போது சுற்றுச்சூழல் பாதிக்கவில்லையா?" என்று கேட்டிருந்தார். அத்துடன் அண்மையில் இந்திய வேளாண் சட்டங்களைப் பற்றியும் பேசிய திரு பழனிசாமி, இந்தச் சட்டங்களால் தமிழகத்திற்கு என்ன பாதிப்பு என வினவினார். இச்சட்டங்கள் பயனளிக்கும் என்பதால் தமிழக அரசு இவற்றை வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.

"விருப்பப்பட்டால் மட்டுமே வேளாண் சட்டத்தை தமிழக விவசாயிகள் பயன்படுத்தலாம்.விளைபொருட்களை நல்ல விலைக்கு விவசாயிகள் விற்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம்," என்று அவர் தெரிவித்தார்.