குரங்கைத் துரத்திச் சென்ற சிறுத்தை; கிணற்றில் பாய்ந்து இரண்டும் பலி

1 mins read
f690ed7d-baeb-4633-9c10-10c7661a656d
படம்: தமிழக ஊடகம் -

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி பகுதிக்கு அருகில் குரங்கை வேட்டையாட சிறுத்தை ஒன்று அதனைத் துரத்திச் சென்றது.

ஆனால், குரங்கைப் பிடிக்க சிறுத்தை பாய்ந்த இடம் ஒரு கிணறு என்பதால், குரங்கும் சிறுத்தையும் கிணற்றுக்குள் விழுந்தன.

விழுந்த வேகத்தில் தண்ணீருக்குள் மூழ்கி இரண்டு விலங்குகளும் பரிதாபமாக உயிரிழந்தன.

கிணற்றுக்குள் சிறுத்தையின் உடலைப் பார்த்து, வனத்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது.

அங்கு வந்த அதிகாரிகள் சிறுத்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது, குரங்கின் சடலத்தையும் கண்டுபிடித்தனர்.

உடற்கூறு ஆய்வின்போது, குரங்கின் உடலில் சிறுத்தையின் கீறல்கள் இருப்பதைக் கண்டுபிடித்த அதிகாரிகள், குரங்கை வேட்டையாடச் சென்றபோது இரண்டும் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்