சென்னையில் சாலையின் நடுவில் திடீர்ப் பள்ளம்; மக்கள் அதிர்ச்சி

சென்னையில் சாலையின் நடுவில் திடீர்ப் பள்ளம்; மக்கள் அதிர்ச்சி

1 mins read
9be4c69f-231b-4e3e-9b76-9d9d92d347a1
படம்: தமிழக ஊடகம் -

சென்னை கிண்டியை அடுத்த ஆலந்தூர் ராம் நகரில் இருந்து வானுவாம்பேட்டையை இணைக்கும் முக்கிய சாலையில் பரத் மருத்துவமனைக்கு அருகே சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

கழிவுநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அந்த பள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதைக்கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆலந்தூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அந்தச் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சாலையில் யாரும் செல்லாத வகையில் மூடப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்