போலிஸ் நிலையத்திற்குள் ஓடி சிக்கிய கஞ்சா கடத்திகள்

போலிஸ் நிலையத்திற்குள் ஓடி சிக்கிய கஞ்சா கடத்திகள்

1 mins read
b9723b83-ce96-4f42-b8df-68a190eb3f75
படம்: தமிழக ஊடகம் -

கேரளா- தமிழகம் எல்லையில் கம்பம் மெட்டு என்ற இடத்தில் தமிழக போலிசாரிடம் பிடிபட்ட இரண்டு கஞ்சா கடத்திகள் தப்பி கேரள எல்லைக்குள் ஓடிவிட்டனர்.

ஆனால் அவர்கள் ஓட்டத்தைவிட விரைவாக தமிழக போலிசார் கேரள அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துவிட்டனர்.

கேரள எல்லைக்குள் நுழைந்து ஓடிய அந்த இரண்டு போதை பேர்வழிகளும் தங்களை அதிகாரிகள் விரட்டி வருகிறார்கள் என்று நினைத்து அவர்களிடம் இருந்து தப்ப பக்கத்தில் இருந்த ஒரு கட்டடத்திற்குள் நுழைந்தனர்.

ஆனால் அது காவல் நிலையம் என்பது உள்ளே நுழைந்த பிறகுதான் அவர்களுக்குத் தெரிந்தது.

அங்கிருந்த அதிகாரிகள் இருவரையும் விசாரிக்க, கஞ்சா கடத்திகள் இருவரும் உண்மையைக் கக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதன் விளைவாக மேலும் இரண்டு பேர் சிக்கினர். நால்வர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்