சிறையில் விசாரணைக் கைதி மரணம்; உறவினர்கள் போராட்டம்

தமி­ழ­கத்­தில் சாத்­தான் குளம் சம்­ப­வம் போன்றே மற்­றொரு கைதி­யும் மர­ணம் அடைந்­துள்ள நிலை­யில், அவ­ரது மர­ணத்­தில் சந்­தே­கம் இருப்­ப­தாகக் கூறி, அவ­ரது உடலை வாங்க மறுத்து மூன்று குழந்­தை­க­ளு­டன் கைதி­யின் மனைவி பிரபா போராட்­டத்­தில் ஈடு­பட்­டார்.

சென்­னை­யில் உள்ள அன்னை சத்­தியா நக­ரைச் சேர்ந்­த­வர் ஆட்டோ ஓட்­டு­நர் மகா­லிங்­கம்.

கடந்த திங்­க­ளன்று எட்டு கிலோ கஞ்­சா­வு­டன் பிடி­பட்ட இவரை ஐஸ் ஹவுஸ் காவல்­து­றை­யி­னர் கைது செய்­த­னர்.

இதைத்­தொ­டர்ந்து சைதாப்­பேட்டை சிறை­யில் அடைக்­கப்­பட்­டி­ருந்த மகா­லிங்­கம் திடீ­ரென நேற்று காலை இறந்துவிட்­ட­தாக காவல்துறை­யி­னர் அவ­ரது குடும்­பத்­திற்குத் தக­வல் தந்த­னர்.

மகா­லிங்­கத்­தின் உடல் வைக்­கப்­பட்­டுள்ள ராஜீவ்­ காந்தி அரசு மருத்­து­வ­ம­னை­யில் மாஜிஸ்­தி­ரேட் விசா­ரணை நடத்­தி­னார்.

இந்நிலையில், தனது கண­வர் மர­ணத்­தில் சந்­தே­கம் இருப்­ப­தா­க­வும் காவல்­துை­ற­யி­னர் தனது கண­வரை அடித்­துக் கொன்­று­விட்­ட­தா­க­வும் மகா­லிங்­கத்­தின் மனைவி பிரபா குற்­றம்­சாட்­டி­யுள்­ளார்.

உயி­ரி­ழந்த மகா­லிங்­கம் புற்­று­நோய் அறுவை சிகிச்சை செய்­து­கொண்­ட­வர் என்­றும் சிறு­நீ­ரக பாதிப்பு உடை­ய­வர் என்­றும் சிறை­யில் சரி­யாக உணவு எடுத்­துக்­கொள்­ளா­த­தால் வாந்தி, வயிற்­றுப் போக்­கால் மயக்­க­ம­டைந்து இறந்து­விட்­ட­தாகவும் மாஜிஸ்­தி­ரேட்டிடம் காவல்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­ச­ம­யம் தனது கண­வர் ஆரோக்­கி­ய­மா­கவே இருந்­த­தா­க­வும் போலி­சார் தாக்­கி­ய­தில் அவர் இறந்துவிட்­ட­தா­க­வும் பிரபா குற்­றம்­சாட்­டி உள்ளார். உடல் கூர் ஆய்வுக்குப் பிறகே உயிரி ழப்புக்கான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!