'ரஜினி திருவண்ணாமலையில் போட்டியிடும் வாய்ப்புள்ளது'

1 mins read
2f6004dd-e0de-457f-9bc6-91065c3e7b42
-

இன்று ரஜி­னி­யின் பிறந்த நாள். இந்த நாளை முன்­னிட்­டும் அவ­ரது அர­சி­யல் பய­ணம் தங்கு தடை­யின்றி சுமூ­க­மா­கச் சென்று வெற்­றி­யைப் பெற­வும் திரு­வண்­ணா­மலை அரு­ண­கிரி நாதர் கோவி­லில் யாகம் நடத்­தப்­பட்­ட­தாக ரஜி­னி­யின் அண்­ணன் சத்­திய நாரா­யணா கூறி­யுள்­ளார்.

அதன்­பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், "ரஜி­னி­யும் மக்­களும் நல­மாக இருக்­க­வேண்­டும் என யாகம் நடத்­தி­ய­தா­க­வும் கட­வுள் விருப்­பப்­பட்­டால் ரஜினி திரு­வண்­ணா­ம­லை­யில் போட்­டி­யிட வாய்ப்­புள்­ளது," என்றும் கூறி­னார்.

இந்­நி­லை­யில் ரஜினி கட்­சி­யி­னர் டெல்­லி­யில் உள்ள தேர்­தல் ஆணை­யத்­தில் தங்­க­ளது கட்­சி­யைப் பதிவு செய்­வ­தற்­காக அங்கு விரைந்­துள்­ள­தா­கத் தக­வல்­கள் தெரி­வித்­தன.

இதற்­காக ரஜினி கட்­சி­யின் தலைமை ஒருங்­கி­ணைப்­பா­ளர் அர்­ஜுனா மூர்த்தி, மேற்­பார்­வை­யா­ளர் தமி­ழ­ருவி மணி­யன், ரஜினி மக்­கள் மன்­றத்­தின் முக்­கிய நிர்­வா­கி­கள் பல­ரும் டெல்லி சென்­றுள்­ள­தா­கக் கூறப்­பட்­டது.

அத்­து­டன், கட்­சி­யின் பெய­ரும் தேர்வு செய்­யப்­பட்டுவிட்­ட­தா­க­வும் மொத்­தம் ஐந்து பெயர்­களில் ஒன்றை ரஜினி தேர்வு செய்து உள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

டெல்­லி­யில் உள்ள தேர்­தல் ஆணை­யத்­தில் ரஜி­னி­யின் வழக்­க­றி­ஞர்­களும் மன்ற நிர்­வா­கி­களும் கட்­சி­யைப் பதிவு செய்­யும் வேலை­யில் நேற்று ஈடு­பட்டு இருந்­த­தா­க­வும் தக­வல்­கள் கூறின.

அத்­து­டன், கட்­சிக் கொடி­யும் தயா­ராகிவிட்­ட­தா­க­வும் வெள்ளை நிறத்­தில் நடு­வில் வட்­ட­மான இடத்­தில் ரஜி­னி­யின் புகைப்­ப­டம் இருக்­கும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், கட்­சி­யின் பெயர் அறி­விக்­கப்­பட்­ட­வு­டன் தமி­ழ­கத்­தி­லுள்ள ஒவ்­வொரு மாவட்­டத்­தி­லும் அனைத்து தெருக்­க­ளி­லும் கட்­சிக் கொடியை நிறுவ ஏற்­பாடு செய்­துள்­ள­தா­க­வும் கூறி­யுள்­ள­னர்.

குறிப்புச் சொற்கள்