கிரிக்கெட் பந்து தாக்கி இளையர் உயிரிழப்பு

கிரிக்கெட் பந்து தாக்கி இளையர் உயிரிழப்பு

1 mins read
1b9da0bd-19cd-4977-bdd7-5cb67ed0415e
லோகநாதனைப் பரிசோதித்த மருத்துவர்கள், வழியிலேயே இவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். படம்: தமிழக ஊடகம் -

கிரிக்கெட் விளையாடியபோது பந்து நெஞ்சில் பட்டு, சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், புன்னப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தாமோதரன். அவருடைய மகன் லோகநாதன், 24 (படம்), ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள ஒரு தனியார் சட்டக் கல்லூரியில் பயின்று வந்தார்.

இந்நிலையில், நேற்று நண்பர்களுடன் சேர்ந்து லோகநாதன் கிரிக்கெட் விளையாடினார். களக்காப்பில் ஈடுபட்டு இருந்த லோகநாதன், இன்னொருவர் அடித்த பந்தைப் பிடிக்க முயன்றபோது, பந்து இவரது நெஞ்சில் பட்டது.

பந்து பலமாகத் தாக்கியதால் அவ்விடத்திலேயே இவர் மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், உடனடியாக இவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

லோகநாதனைப் பரிசோதித்த மருத்துவர்கள், வழியிலேயே இவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, லோகநாதனின் உடலைக் கூராய்வு செய்யக் காலதாமதம் ஏற்பட, இவரின் நண்பர்களும் உறவினர்களும் சாலை மறியலில் இறங்கினர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் போதிய மருத்துவர்கள் இல்லை என்றும் அதனால் உடற்கூராய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது என்றும் விளக்கமளித்த காவல்துறையினர் உடனடியாக உடற்கூராய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டனர்.

உயிரிழந்த லோகநாதன், நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் ராசாத்தி, 20, என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்