ரஜினி தொடங்கும் புதிய கட்சியின் பெயர் 'மக்கள் சேவை கட்சி' எனத் தகவல்

நடிகர் ரஜினிகாந்த் தமது கட்சிக்கு ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும் இவரது கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன.

தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தில், கட்சியின் நிறுவனராக ரஜினியின் பெயர் இடம்பெற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்தக் கட்சி போட்டியிடும் என்றும் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கட்சிப் பெயர், சின்னம் குறித்த தகவல்கள் வெளிவந்ததில் ரஜினி ஆதரவாளர்களும் ரசிகர்களும் தங்கள் மகிழ்ச்சியை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

‘பாபா’ படத்தில் ரஜினி காட்டிய ‘ஹஸ்த’ முத்திரை சின்னத்தைப் பெற ரஜினி விரும்பினார். ஆனால் அது கிடைக்கவில்லை. இரண்டு விரல்களை உயர்த்திக் காட்டும் அந்தச் சின்னம் காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் போன்று தோற்றம் அளிக்கும் என்பதால் அதை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

எனினும், ‘ஆட்டோ’ சின்னம் கிடைத்ததில் ரஜினி ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் கட்சியை மிக எளிதாக கொண்டுசேர்க்க முடியும் என அவர்கள் நம்புகிறார்கள்.

ஆட்டோக்காரராக ரஜினி நடித்த ‘பாட்ஷா’ படம் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்த படம். பெரும் வெற்றி பெற்ற இப்படம் ரஜினியை உலகெங்கும் பிரபலமாக்கி இவரது ‘சூப்பர் ஸ்டார்’ நிலையை உயர்த்தியது. ரஜினியின் ‘ஆட்டோக்காரன்’ பாட்டு மிகவும் பிரபலமானது.

இந்நிலையில், வரும் ஜனவரியில் கட்சி தொடங்கப்போவதாகவும் இம்மாதம் 31ஆம் தேதி அதுகுறித்த அறிவிப்பை வெளியிடப்போவதாகவும் ரஜினி தெரிவித்திருந்தார். கட்சி மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியையும் நியமித்து முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தேர்தல் பிரசாரத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப்பட திட்டமிடப்பட்டு வருகிறது. ‘ஹோலோகிராஃபிக்’ எனப்படும் முப்பரிமாணக் காட்சி, ஹெலிகாப்டர் சுற்றுப்பயணங்கள் மூலம் ரஜினி பிரசாரத்தில் பங்கேற்பதுடன் எல்இடி திரைகள் கொண்ட வாகனங்கள் மூலம் பரப்புரை செய்யவும் ஏற்பாடுகள் நடைபெறுவதாக அறியப்படுகிறது.

ஜனவரி மாதம் இறுதியில் ரஜினிகாந்த் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சி குறித்து தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தி வந்தாலும் கட்சியின் பெயர், அறிவிப்பு வரும்வரை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறார்.

இதுகுறித்த அதிகாரபூர்வ தகவலை ரஜினி விரைவில் வெளியிடுவார் என்று தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!