துப்பாக்கி முனையில் 47 மீனவர்கள் கைது; அமைச்சர் கண்டனம்

2 mins read
7438eb97-b7f0-4795-9392-af3d23495783
படம்: தமிழக ஊடகம் -

ராமேஸ்வரம், புதுக்கோட்டையைச் சேர்ந்த 47 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்ததற்கு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவுக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டி ருந்த தமிழக மீனவர்களை வழி மறித்த இலங்கைக் கடற்படையினர் அவர்களைத் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

மீனவர்கள் தங்களின் எல்லை யைத் தாண்டி இலங்கை கடற்பகுதி யில் மீன்பிடித்ததாகக் கூறி, ராம நாதபுரத்தைச் சேர்ந்த 27 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டம், கோட்டை பட்டினத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் என மொத்தம் 47 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

அத்துடன் மீனவர்களின் ஏழு படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

கைதான மீனவர்களை நேற்று இலங்கை நீதிமன்றத்தில் முன்னி லைப்படுத்தி, சிறையில் அடைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகை யில், "தமிழக மீனவர்கள் வேண்டும் என்றே எல்லை தாண்டுவது கிடை யாது. நம் மீனவர்களை இலங்கை சிறையில் அடைப்பதை ஏற்க முடியாது. இலங்கை கடற்படைக்கு மத்திய அரசின் மூலம் அழுத்தம் தரப்படும்," என்றார்.

அண்மைக்காலமாக எல்லை தாண்டுவதாகக் கூறி தமிழக மீன வர்கள் மீது இலங்கை கடற்படை யினர் தாக்குதலில் ஈடுபடுவதும் படகுகளைச் சேதப்படுத்துவதும் வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், மீனவர்கள் கைதான சம்பவத்தை எதிர்த்து காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு ஒரு முடிவு காணும் வரை கடலுக்குச் செல்லமாட்டோம் எனவும் திட்டவட்ட மாகத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது டுவிட்டர் பதிவில், "மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என வலியுறுத்தி உள்ளார்.

தமிழக மீனவர்கள் வேண்டும் என்றே எல்லை தாண்டுவது கிடையாது. தெரியாமல் சென்றவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்ததை ஏற்க முடியாது. இது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறல்.

மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்