கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன.
இதுவரையில் திறக்கப்படவில்லை என்பதால், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டிறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
தனியார் பள்ளிகளில் இணையம் வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2020-2021 ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
மேலும், 9ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு 50%, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு 35% பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும் தனியார் பள்ளிகள் அரையாண்டு தேர்வை இணையம் வழி நடத்திக் கொள்ளலாம் என்றும் அவரது அறிக்கை குறிப்பிடுகிறது.

