10 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கிருமித்தொற்று பதிவு; விதிமீறும் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை

தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காத கல்லூரிகளுக்கு அரசு கடும் எச்சரிக்கை

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பாதிப்பு வேக­மாக குறைந்து வரு­கிறது. பத்து மாவட்­டங்­களில் புதி­தாக கிருமி தொற்­றி­யோ­ரின் எண்­ணிக்கை ஒற்றை இலக்­கத்­தில் பதி­வாகி உள்­ளது.

கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லைத் தடுக்க தமி­ழக அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கிறது. இத­னால் புதி­தாக கிருமி தொற்­றி­யோ­ரின் எண்­ணிக்கை நாள்­தோ­றும் குறைந்து வரு­கிறது.

கடந்த ஒரு மாத­மாக தின­மும் பதி­வா­கும் புது நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை இரண்­டா­யி­ரத்­துக்­கும் குறை­வாக உள்­ளது. நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் புதி­தாக 1,132 பேருக்கு கிருமி தொற்றி இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.

மாநி­லம் முழு­வ­தும் இது­வரை 801,161 பேர் கொவிட்-19 நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இது­வரை 779,291 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர். பலி எண்­ணிக்கை 11,919ஆக உள்­ளது.

இந்­நி­லை­யில் சில மாவட்­டங்­களில் புதிய பாதிப்பு சம்­ப­வங்­கள் ஒற்றை இலக்­கத்­தில் பதி­வாகி வரு­வது மக்­கள் மத்­தி­யில் நிம்­ம­தியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இதற்­கி­டையே சென்னை ஐஐடி கல்வி நிலை­யத்­தில் மேலும் எட்டு மாண­வர்­க­ளுக்கு கொரோனா கிருமி தொற்­றி­யது உறு­தி­யா­னது. அங்கு பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 191ஆக அதி­க­ரித்­துள்­ளது.

இந்­நி­லை­யில் கொரோனா தடுப்பு வழி­மு­றை­களைக் கடைப்­பி­டிக்­காத கல்­லூ­ரி­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என சுகா­தா­ரத்­துறை செய­லா­ளர் ராதா­கி­ருஷ்­ணன் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார். அர­சுப் பள்­ளி­கள், அரசு உத­வி­பெ­றும் பள்­ளி­களில் அரை­யாண்­டுத் தேர்வு ரத்து செய்­யப்­ப­டு­வ­தாக பள்­ளிக்­கல்­வித்­துறை அமைச்­சர் செங்­கோட்­டை­யன் அறி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!