58 நிமிடங்களில் 46 வகை உணவுகள்; சமைத்து உலக சாதனை புரிந்த 9 வயது சிறுமி

58 நிமிடங்களில் 46 வகை உணவுகள்; சமைத்து உலக சாதனை புரிந்த 9 வயது சிறுமி

1 mins read
2bf81de0-2385-41dc-bf9b-3aa3cd9dee77
சாதனைச் சிறுமி லட்சுமி சாய் ஸ்ரீ. படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தைச் சேர்ந்த சிறுமி லட்­சுமி சாய் ஸ்ரீ 58 நிமி­டங்­களில் 46 வித­மான உண­வு­க­ளைச் சமைத்து சாதனை படைத்­துள்­ளார்.

இதை­ய­டுத்து அவ­ரது பெயர் 'யுனிகோ' உலக சாத­னைப் புத்­த­கத்­தில் இடம்­பி­டித்­துள்­ளது.

கொரோனா ஊர­டங்­கின் போது வீட்­டில் முடங்க நேரிட்­ட­தால் தனது தாயா­ரி­டம் சமை­க்க கற்­றுக்கொண்­டுள்­ளார் இச்­சி­றுமி.

சமை­யல் கலை­யில் மக­ளுக்கு ஏற்­பட்ட ஆர்­வத்­தைக் கண்ட லட்­சு­மி­யின் தந்தை உலக சாதனை படைக்­கும்­படி ஊக்­கம் கொடுத்­துள்­ளார்.

கேர­ளா­வைச் சேர்ந்த சிறுமி சான்வி, ஒரு மணி நேரத்­தில் 33 வகை­யான உணவு வகை­க­ளைச் சமைத்து சாதனை படைத்­தி­ருப்­பதை அறிந்த லட்­சுமி சாய் ஸ்ரீ, தற்­போது அதை முறி­ய­டித்­துள்­ளார்.

தமது தாயா­ரி­டம் இருந்து பல்­வேறு உணவு வகை­க­ளைச் சமைக்க கற்­றுக்கொண்­ட­தாக குறிப்­பிட்­டுள்ள சிறுமி லட்­சுமி சாய் ஸ்ரீ, உலக சாத­னை­யா­ளர்­கள் பட்­டி­ய­லில் தமது பெய­ரும் இடம்­பெற்­றி­ருப்­பது மகிழ்ச்சி அளிப்­ப­தாக தெரி­வித்­துள்­ளார்.

குறிப்புச் சொற்கள்