முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.9 கோடி அபராதம் வசூல்

முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.9 கோடி அபராதம் வசூல்

1 mins read
33d237b3-35eb-4aa0-a44d-61f6721e2df6
செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளிடம் கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய ராதாகிருஷ்ணன், முகக்கவசம் அணியாமல் இருந்த ஒரு மூதாட்டிக்கு தன் கைகளாலேயே முகக்கவசத்தை அணிவிக்கிறார். படம்: தமிழக ஊடகம் -

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்துகளில் ஏறி, பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து உள்ளார்களா என்பதை சோதனை செய்த சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், முகக்கவசம் அணியாமல் இருந்த பயணிகளிடம் முகக்கவசத்தை வழங்கி அதை அணியும்படி கூறினார்.

அத்துடன், அதன் முக்கியத்து வம் குறித்தும் மக்களிடம் அவர் விளக்கினார்.

இதைத்தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசிய ஜெ.ராதா கிருஷ்ணன், "தமிழகத்தில் கொேரானா பரவலால் பாதிக்கப்படு வோர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதற்கு முகக் கவசத்தை அணிந்துகொள்ளும் பொதுமக்களின் ஒத்துழைப்பே முக்கிய காரணம்.

"இருப்பினும், ஒருசிலர் இதன் முக்கியத்துவம் புரியாமல் முகக் கவசம் அணியாமல் வெளியில் சென்று வருகின்றனர்.

"இதுபோல் பொறுப்பற்று நடந்து கொண்ட 12 லட்சம் மக்களிடம் இருந்து ரூ.9 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

"கொரோனா பரவலின் தாக்கம் தமிழகத்தில் இன்னும் முழுமை யாகக் குறையாத சூழலில், பொது மக்கள் முகக்கவசத்தை பொது இடங்களில் கழற்றுவதைத் தவிர்க்க வேண்டும். அலட்சியமாக அணியா மல், மூக்கை நன்கு மூடும் வகை யில் அணிந்துகொள்ள வேண்டும்.

"கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு மனநல சிகிச்சை அந்தந்த அரசு மருத்துவ மனையில் வழங்கப்பட்டு வருகிறது," என்றார்.

குறிப்புச் சொற்கள்