தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக மீண்டும் விடாது தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால், விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ெவகுவாகப் பாதிக்கப்பட்டு அவர்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் வெளியில் ெசன்று வரு வதும் பாதிக்கப்பட்டுள்ளதால் மீன், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட விற் னையாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
சரியான வடிகால் வசதியின்றி வீட்டைச் சுற்றி தேங்கியுள்ள நீரால் பல மாவட்டங்களிலும் வசிக்கும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மழை தொடர்ந்து பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், "வடகிழக்கு பருவமழை இந்த மாதக் கடைசி வரை நீடிக்கும். பருவக்காற்று குறைவதுடன் அதன் ஈரப்பதமும் குறைந்தால்தான் மழைப் பொழிவு குறையத் துவங்கும். தற்போதைய சூழ்நிலையில் மழை தொடர்வதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
"வளிமண்டல சுழற்சியால் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலுார், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்கள், புதுச்சேரியில் சில இடங்களிலும் கனமழை பெய்யும். இம்மாதக் கடைசி வரை மழை தொடர வாய்ப்புள்ளது," என்று பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
கடந்த இரு நாட்களாக நாகை, நாகூர், வேளாங்கண்ணி, திருக் குவளை, கீழ்வேளூர், திருமருகல், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புரெவிப் புயலால் பெய்த கனமழையால் வயல்களில் தேங்கிய மழைநீரை வடியவைக்கும் முயற்சியில் விவசாயிகள் படாத பாடுபட்டனர். அதன்பின்னர், கடந்த சில நாட்களாக வெயில் அடித்ததால் நிம்மதி அடைந்தனர்.
ஆனால், இப்போது மீண்டும் பெய்து வரும் தொடர்மழையால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த தொடர்மழை காரணமாக தஞ்சை, நாகை, வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த 20,000 மீனவர்கள் கடந்த இரு நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தஞ்சை அருகே பட்டுக்கோட்டை யில் தரைப்பாலம் மூழ்கும் அபா யத்தில் உள்ளதால் அங்கு மீண்டும் போக்குவரத்து பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் வேதாரண்யத்தில் வாய்க்கால், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பல இடங்களில் தரைப்பாலத்தின் மேல் உபரிநீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பம்பை ஆற்றிலும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ேவதா ரண்யத்தில் ெதாடா் மழையால் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்தது.
அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்காக 2 அடி முதல் 3 அடி தண்ணீாில் மக்கள் நடந்து செல்லும் நிலை உள்ளது.
படம்: தமிழக ஊடகம்

