அடுத்த மாதம் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி வருகிறது.
இந்தாண்டு ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500 ரொக்கப் பணம், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, 20 கிராம் உலர் திராட்சை, முந்திரி 5 கிராம், ஏலக்காய், நெய் 100 கிராம் உள்ளிட்ட பொருட்களுடன் சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும் திட்டத்தையும் இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை யும் முதல்வர் துவக்கி வைத்தார்.
இந்தத் திட்டம் ஜனவரி 4 முதல் செயல்படுத்தப்படும் என டிசம்பர் 19ஆம் தேதி முதல்வர் அறிவித் திருந்த நிலையில், இத்திட்டத்தை தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்த முதல்வர் முதல்கட்டமாக ஒன்பது அரிசி கார்டுதாரர்களுக்கு பணம், பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பை வழங்கினார். இத்திட் டத்திற்காக தமிழக அரசு 5,604.84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. அத்துடன், 484.25 கோடி ரூபாய் செலவில் 1.80 லட்சம் வேட்டி- சேலைகள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் துவக்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்கட்டமாக ஒன்பது குடும்பங்களுக்கு மட்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு, இலவச வேட்டி சேலைகளை வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, காமராஜ், உதயகுமார், இதர அதிகாரிகள் பங்கேற்றனர்.