பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை; தீவிர கண்காணிப்பில் 2,800 பேர்

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை; தீவிர கண்காணிப்பில் 2,800 பேர்

1 mins read
2f3b5263-8bde-4209-a24f-0ac3a6d4a4b9
பிரிட்டனிலிருந்து சென்னைக்கு வந்த பயணிகள் தனிமைப்படுத்தும் வளாகங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். படம்: ஏஎஃப்பி -

கடந்த சில நாள்களாக இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்துள்ள 2,800 பேரும் மருத்துவர்களின் முழு கண்காணிப் பில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

"இங்கிலாந்தில் இருந்து நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும் வந்துள்ள 2,800 பேரும் சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறையின் மூன்றடுக்கு வளையத்தின் கண்காணிப்பில் உள்ளனர்," என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா கிருமிப் பரவல் முழு கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் பொது மக்கள் புதுவகையான வீரியமிக்க கிருமியை நினைத்து தேவையற்ற பதட்டமோ, பயமோ கொள்ள வேண்டாம் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதற்கிடையே, இக்கிருமியை தமிழகத்திற்குள் பரவவிடாமல் முறியடிப்பது குறித்து வரும் 28ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழகத்தில் புதிய வீரியமிக்க கிருமியைப் பரவாமல் தடுக்க மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

அத்துடன் மாவட்ட எல்லைகளும் சோதனை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஏற்கெனவே உள்ள தடுப்பு வழி முறைகளான முகக்கவசம் அணிவது, தனி நபர் இடைவெளி, அடிக்கடி கைகளைக் கழுவது போன்றவற்றை கடைப்பிடித்தாலே கொரோனா மட்டுமின்றி, எளிதில் பரவும் எந்த கிருமி பாதிப்பிலிருந்தும் தப்பிக்கலாம் என வழிகாட்டியுள்ளது சுகாதாரத்துறை.