துணை முதல்வர் பதவி கேட்கும் பாமக; அதிர்ச்சியில் அதிமுக

துணை முதல்வர் பதவி கேட்கும் பாமக; அதிர்ச்சியில் அதிமுக

2 mins read

திண்­டி­வ­னம்: துணை முதல்­வர் பதவியுடன் தாங்­கள் போட்­டி­யி­டு­வதற்குத் தோதாக அதிக இடங்­க­ளையும் தர­வேண்­டும் என பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் பல கோரிக்கை களையும் வலியுறுத்தியதை அடுத்து, கூட்­டணி பேச்சுவார்த்­தைக்­குச் சென்ற அதி­முக அமைச்­சர்­கள் அதிர்ச்சி அடைந்­த­னர்.

இந்நிலையில், திமுக, அதி­முக இல்­லாத மூன்­றா­வது கூட்­டணி தொடர்­பாக பாமக யோசித்து வரு­வ­தா­க­வும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஏற்­கெ­னவே இது­கு­றித்து ரஜினி-அன்­பு­ம­ணிக்கு இடையே பேச்­சு­வார்த்தை துவக்­கப்­பட்டு விட்­ட­தா­க­வும் அதன் அடிப்­ப­டை­யில் தங்­க­ளது கூட்­டணி குறித்து ஜன­வரி இறு­தி­யில் முடிவு செய்ய பாமக திட்­ட­மிட்­டுள்­ள­தா­க­வும் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

பாம­க­வு­ட­னான கூட்­ட­ணியை உறுதி செய்ய விழுப்­பு­ரம் மாவட்­டம், திண்­டி­வ­னத்தை அடுத்த தைலா­பு­ரத்­தில் ராம­தாசை அதி­மு­க­வின் மின்­சா­ரத்­துறை அமைச்­சர் தங்­க­மணி, உயர்­கல்­வித்­ துறை அமைச்­சர் கே.பி.அன்­ப­ழ­கன் ஆகி­யோர் சந்­தித்­துப் பேசி­னர்.

அப்­போது, துணை முதல்­வர் பதவி உள்­ளிட்ட நிபந்­த­னை­களை விதித்து அமைச்­சர்­களை ராம­தாஸ் திருப்பி அனுப்­பி­ய­தால் அதி­முக-பாமக கூட்­ட­ணி­யில் விரி­சல் ஏற்­படும் சூழல் உருவாகி உள்ளது.

தமி­ழக சட்­ட­மன்­றத் தேர்­தல் வரும் ஏப்­ரல் அல்­லது மே மாதத்­தில் நடை­பெற உள்­ள நிலையில், கூட்­ட­ணி­யில் உள்ள பாஜக, பாமக, தேமு­திக உள்­ளிட்ட கட்­சி­கள் அதிக இடம் கேட்டு அதி­மு­க­வுக்கு நெருக்கடி கொடுத்து வரு­கின்­றன.

குறிப்­பாக, பாஜக 60 தொகுதி கள், தேமு­திக 41 தொகுதிகள் கேட்­ப­தா­கவும் கூறப்­படு­கிறது.

இந்­நி­லை­யில், பாஜ­க­வுக்கு கொடுக்கும் அதே அள­வி­லான தொகு­தி­களைத் தங்­க­ளுக்­கும் தரும்படி கோரியுள்ளது பாமக.

அத்துடன், வட­மா­வட்­டங்­களில் எங்­க­ளுக்கு கிடைக்­கும் வாக்­கு­களின் விழுக்­கா­டும் அதி­கம் என்­ப­தால் எங்­க­ளுக்கு துணை முதல்­வர் பதவியும் தரவேண்­டும் என கேட்­டுள்ளதாகச் சொல்லப்­ப­டு­கிறது.

வரும் 31ஆம் தேதி நடக்­க­வுள்ள பாமகவின் பொதுக்­குழு கூட்­டத்­தில் கூட்­டணி குறித்து முக்­கிய முடி­வு­கள் எடுக்­கப்­ப­ட­லாம் என­வும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சிறுமி பாலியல்

வன்கொடுமை:

இருவருக்கு

சாகும்வரை சிறை

கோவை: கோவையை அடுத்த காரமடையில் தனியார் பள்ளி யில் எல்கேஜி படித்து வந்த நான்கு வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வாகன ஓட்டுநரும் அவரது உதவியாளரும் இயற்கையாக சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பள்ளி வேன் ஓட்டுநரான கோவில்பாளையம், சென்ராய புரத்தைச் சேர்ந்த கோவிந்த ராஜ் (37), காரமடையைச் சேர்ந்த மாரிமுத்து (50) ஆகிய இருவரும் கடந்த ஜனவரி மாதம் மயக்க ஊசி போட்டு சிறுமியை கொடுமை செய்தது தெரியவந்தது.