அமைச்சர்: பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தீவிர கண்காணிப்பில் 2,800 பேர்

2 mins read
446ce63c-9199-46ce-8033-170b72617aa8
-

புதுக்­கோட்டை: கடந்த சில நாள்­க­ளாக இங்­கி­லாந்­தில் இருந்து தமி­ழ­கம் வந்­துள்ள 2,800 பேரும் மருத்­து­வர்­க­ளின் தீவிர கண்­கா­ணிப்­பில் இருப்­ப­தாக சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர் தெரி­வித்­துள்­ளார்.

"இங்­கி­லாந்­தில் இருந்து நீல­கிரி, திரு­வள்­ளூர், காஞ்­சி­பு­ரம் உள்­ளிட்ட பல மாவட்­டங்­க­ளுக்­கு வந்­துள்ள 2,800 பேரும் சுகா­தா­ரத்­துறை, காவல்­துறை, உள்­ளாட்­சித்­ து­றை­யின் மூன்­ற­டுக்கு கண் காணிப்பு வளை­யத்­தில் உள்­ள­னர்," என்று அமைச்­சர் மேலும் கூறி­னார்.

புதுக்­கோட்டை மாவட்­டம், வீரப் பட்­டில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அமைச் சர் பேசி­ய­போது, "தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மிப் பர­வல் முழுக் கட்­டுப்­பாட்­டில் உள்­ளது. பொது மக்­கள் புது­வ­கை­யான வீரி­ய­மிக்க கிரு­மியை நினைத்து தேவை­யற்ற பதட்­டமோ, பயமோ கொள்ள வேண்­டாம்.

"இங்­கி­லாந்­தில் இருந்து திரு­வள்­ளூர், நீல­கிரி மாவட்­டங்­க­ளுக்கு வந்­துள்­ள­வர்­க­ளுக்கு கிரு­மித்­தொற்­றில்லை என்­பதை ஆட்­சி­யர்­கள் உறு­திப்­ப­டுத்தி உள்­ள­னர்.

"அதே­போல் காஞ்­சி­பு­ரம் மாவட்­டத்­துக்கு வந்­துள்ள ஏழு பேருக்கு கொரோனா பரி­சோ­தனை செய்­யப்­பட்டு, அவர்­களை அணுக்க மாகக் கண்­கா­ணித்து வரு­வ­தா­க­வும் அம்­மா­வட்ட ஆட்­சி­யரும் கூறி­யுள்­ளார்," என்­றார் விஜ­ய­பாஸ்­கர்.

இதற்­கி­டையே, இக்­கி­ரு­மியை தமி­ழ­கத்­திற்­குள் பர­வ­வி­டா­மல் முறி­ய­டிப்­பது குறித்து வரும் 28ஆம் தேதி மருத்­துவ நிபு­ணர்­க­ளு­டன் ஆலோ­சனை நடத்த உள்­ள­தாக முதல்­வர் பழ­னி­சாமி கூறி­யுள்­ளார்.

தமி­ழ­கத்­தில் புதிய வீரி­ய­மிக்க கிருமி பர­வா­மல் தடுக்க மதுரை, கோவை, திருச்சி உள்­ளிட்ட விமான நிலை­யங்­க­ளி­லும் கண்­கா­ணிப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன் மாவட்ட எல்­லை­களும் சோதனை வளை­யத்­திற்­குள் கொண்டு வரப்­பட்­டுள்­ளன.

ஏற்­கெ­னவே உள்ள தடுப்பு வழி முறை­க­ளான முகக்­க­வ­சம் அணி வது, தனி­ந­பர் இடை­வெளி, அடிக்­கடி கைக­ளைக் கழு­வுவது போன்­ற­வற்றை கடைப்­பி­டித்­தாலே கொரோனா மட்­டு­மின்றி, இதர கிருமி பாதிப்­பு­களில் இருந்­தும் நம்மை நாமே தற்­காத்­துக் கொள்­ள­லாம் என்று வழி­காட்டி­யுள்­ளது தமிழக சுகா­தா­ரத்­துறை.

இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்துள்ள 2,800 பேரும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். பொதுமக்கள் புதுவகையான வீரியமிக்க கிருமியை நினைத்து தேவையற்ற பதட்டமோ, பயமோ கொள்ளவேண்டாம்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்