திருப்பத்தூர்: மிட்டூர் அருகே உள்ள குண்டுரெட்டியூர் மலைச்சரி வில் சுமார் 1,270 ஆண்டுகள் பழமையான வட்டெழுத்து கல் வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் பிரபு கூறுகை யில், "கடந்த 2016ஆம் ஆண்டு முதல் திருப்பத்தூர் மாவட்டம், குண்டுரெட்டியூரில் தொடர்ந்து பல கள ஆய்வுகளை மேற்கொண்டு வரலாற்றுத் தடயங்களைக் கண்டுபிடித்து உள்ளோம்.
"தற்போது 30 ஆண்டுகளுக்கு முன்பு தேடப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டை கண்டறிந்துள்ளோம். குண்டுரெட்டியூரில் மலைச்சரிவில் அடர்ந்த புதர்களுக்கிடையே உள்ள சிறிய பாறைக் குன்றின் பக்கவாட்டில் இக்கல்வெட்டு உள்ளது. கி.பி. 751ல் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டானது சற்று சிதைந்துள்ளது.
"கல்வெட்டு அறிஞர் ராஜகோபாலின் உதவியால் தகவல்கள் படிக் கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டன.
"இக்கால தகவல் பலகை போல உள்ள இக்கல்வெட்டானது, சமணப் பள்ளிகளுக்கென வழங்கப்பட்ட 'பள்ளிச் சந்தம்' குறித்தும் அதன் எல்லைகள் குறித்தும் விவரிக்கிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இக்கல்வெட்டானது பழங்கால சமய நல்லிணக்கத்தை எடுத்துக்கூறுவதாக அமைந்துள் ளது," என்று விவரித்தார்.
தூய தமிழ் வட்டெழுத்து களால் கல்வெட்டு பொறிக்கப் பட்டுள்ளது. புடைப்பான விளிம்புடன் கூடிய கட்டத்தில் ஒன்பது வரிகளில் முக்கிய குறிப்பு கள் காணப்படு கின்றன.
படம்: ஊடகம்