'தமிழகத்திலும் பாஜக வெற்றி பெறும்'

'தமிழகத்திலும் பாஜக வெற்றி பெறும்'

1 mins read
198b31e9-014a-4ecd-8650-83cdd7e323c4
-

சென்னை: இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக வெற்றிக்கொடி நாட்டி வருகிறது. அதேபோல், தமிழகத்திலும் அதிக இடங்களில் பாஜக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்றுமுன்தினம் மத்திய அமைச்சர் கூறுகையில், "கூட்டணி என்று ஒன்று இருந்தால், அதில் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது தான் மரபு. இது அதிமுக கூட்டணிக்கு மட்டுமல்ல; எந்த ஒரு கூட்டணியாக இருந்தாலும் சார்ந்திருப்பது அவசியம்.

"தமிழ்நாட்டில் இன்னும் நான்கைந்து மாதங்களில் நடக்க வுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி சிறப்பான வெற்றியைப் பெறும்.

"நாடு முழுவதும் பாஜகவின் வெற்றி அதிகரித்து வருகிறது. தனது ஆட்சி முறையின் காரணமாக காங்கிரஸ் ஒவ்வொரு மாநிலங்களாக இழந்து வருகிறது.

"கடந்த ஆறு ஆண்டுகளாக விவசாயிகளின் நலன்களுக்காக மத்திய அரசு தன்னை அர்ப்பணித்துக்கொண்டு செயல்படுகிறது. வேளாண் சட்டங்கள் தொடர்பாக ராகுல் காந்தியுடன் பொதுவெளியில் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன்.

"இந்தியாவில் உள்ள பெரும்பாலான கட்சிகள் குடும்ப நலன் சார்ந்த கட்சிகளாக உள்ளன. பாஜக மட்டுமே மக்கள் நலன்சார்ந்த கட்சியாக உள்ளது. இதுதான் மற்ற கட்சிகளுக்கும் பாஜகவுக்கும் உள்ள வித்தியாசம்," என்றார்.