திமுக உறுதி: பாலியல் குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றம்

திமுக உறுதி: பாலியல் குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றம்

1 mins read
ae1d2617-230b-4940-961e-8a429773b86e
ஆண்டிப்பட்டி ஒன்றியம், டி.ராஜகோபாலன்பட்டியில் 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற கருப்பொரு ளுடன் கூடிய கிராமசபைக் கூட்டத்தில், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பொது மக்களின் குறைகளைக் கேட்டு தீர்மானத்தை நிறைவேற்றி உரையாற்றினார். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமிழகத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வென்று திமுக ஆட்சி அமைந்தால் மாநிலத்தில் பாலியல் குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமையும் என்று அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி உள்ள திமுக, கிராமங்கள் தோறும் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றியும் மக்களின் விருப்பங்களைத் திரட்டியும் வருகிறது.

கிராமசபைக் கூட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்துவருவதாகக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.