சென்னை: மாறுபட்ட ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் நேற்று மருத்துவமனையில் இருந்து நலமுடன் திரும்பியதாக அறிவிக்கப்பட்டது.
ஒரு திரைப்பட படப்பிடிப்புக்காக அங்கு ரஜினி சென்றிருந்தார். படப்பிடிப்புக் குழுவினர் சிலருக்கு கொவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டது.
கொரோனா தொற்று இல்லை என்றாலும் ரத்த அழுத்தம் சீரான நிலையில் இல்லை என்பதால் அப்போலோ மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டார்.
அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து நேற்றுத் திரும்பியதாக மருத்துவமனை தகவல்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் அறிவித்தன.

