மரடோனாவுக்கு ஆறடி உயர 'கேக்' சிலை

மரடோனாவுக்கு ஆறடி உயர 'கேக்' சிலை

1 mins read
da333b68-0937-4a62-ac9e-2bfcaf560274
ஆறடி உயர கேக் சிலையை பொது மக்கள் ஆர்வத்து டன் பார்த்து ரசிக்கின்றனர். காற்பந்தாட்ட ரசிகர்கள் சிலையை அமைத்துள்ள சதீஷுக்கு பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.படம்: ஊடகம் -

ராம­நா­தபுரம்: காலஞ்­சென்ற காற்­பந்­தாட்ட வீரர் மர­டோ­னா­வுக்கு ராம­நா­த­பு­ரத்­தைச் சேர்ந்த சதீஷ் ரங்­க­நா­தன் ஆறடி உய­ரத்­தில் கேக் சிலை செய்­துள்­ளார்.

இவ­ருக்­குச் சொந்­த­மான பேக்­க­ரி­யில் தயா­ரிக்­கப்­பட்ட இந்த கேக் சிலை கடை வாச­லில் வைக்­கப்­பட்­டுள்­ளது. இதை ஏரா­ள­மா­னோர் ஆர்­வத்­து­டன் கண்டு ரசித்­துச் செல்­கின்­ற­னர்.

"இதற்கு முன்பு இளை­ய­ராஜா, அப்­துல்­க­லாம், பார­தி­யார் ஆகி­யோ­ருக்­கும் இதே போல் கிறிஸ்­து­மஸ் சம­யத்­தில் சிலை வைத்­துள்­ளோம். கிரிக்­கெட்­டிற்கு ஒரு டெண்­டுல்­கர், ஓட்­டப்­போட்­டிக்கு ஒரு உசேன் போல்ட், குத்­துச்­சண்­டைக்கு ஒரு மைக் டைசன் என்­பது போல் காற்­பந்­தாட்­டத்­திற்கு மர­டோனா என்பார்கள். எனவே அவ­ருக்கு மரி­யாதை செய்­யும் வகை­யில் சிலை வைத்துள்ளோம்," என்கிறார் சதீஷ் ரங்கநாதன்.