ரூ.2.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்; விமானப் பொறியாளர் உட்பட மூவர் கைது

2 mins read
fcd45c80-7de3-47cf-bca0-9aa35f784949
விமான நிறுவனப் பொறியாளர் மூலம் கடத்திச் செல்லப்படவிருந்த 27 தங்கக்கட்டிகள், இதர தங்க நகைகள். படம்: ஊடகம் -

சென்னை மீனம்­பாக்­கம் பன்­னாட்டு விமான நிலை­யத்­துக்கு துபா­யில் இருந்து வந்த சிறப்பு விமா­னத்­தில் கடத்தி வரப்­பட்ட ரூ.2.5 கோடி மதிப்­பி­லான 4 கிலோ 800 கிராம் தங்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.

இந்தத் தங்­கத்தை கடத்­து­வ­தற்கு உதவி புரிந்த விமான நிறு­வ­னப் பொறி­யா­ளர் உட்­பட மூவரை கைது செய்த சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள், இந்தச் சம்­ப­வம் தொடர்­பில் மேலும் நால்­வ­ரி­டம் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

சிறப்பு விமா­னத்­தில் வந்த பயணி ஒரு­வர் கழி­வ­றைக்கு சென்று­விட்டு வந்த சிறிது நேரத்­தில் இளைஞா் ஒருவா் உள்ளே சென்றுவந்தாா்.

இதைக் கண்ட சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள், இளை­ஞரி­டம் விசாரித்­த­போது, அவர் விமான நிலை­யத்­தில் கணி­னிப் பொறி­யா­ள­ராகப் பணி­யாற்­றும் நிழல் ரவி, 29, என்­பது தெரி­ய­வந்­தது.

அவரிடம் சோதனை செய்­த­போது இரண்டு பொட்­ட­லங்­களில் 27 தங்­கக்­கட்­டி­கள் இருந்தது கண்டுபி­டிக்­கப்­பட்­டது.

துபாயில் இருந்து வந்த சென்­னை­யைச் சோ்ந்த நியா­மத்­துல்லா ஹாதி, 35, என்­பவா், கடத்­தல் தங்­கத்தை வெளியே கொண்டு வந்து தரும்படி கோரி, கழி­வ­றை­யில் வைத்­த­தா­க­வும் அதை தான் எடுத்து வெளியே செல்ல இருந்­த­தா­க­வும் கூறினாா்.

இதை­ய­டுத்து நியா­மத்­துல்லா ஹாதியை சுங்கத் துறை அதிகாரி கள் கைது செய்து 3 கிலோ 200 கிராம் தங்­கத்தைப் பறிமுதல் செய்தனர்.

அதே­போல் மற்ெறாரு சம்­ப­வத்­தில் துபா­யில் இருந்து வந்த அப்­துல் நாசிர் உள்­பட ஐவ­ரி­டம் சுங்கத் துறை அதி­கா­ரி­கள் 1 கிலோ 600 கிராம் தங்­கத்தைக் கைப்­பற்­றினர்.

இதையடுத்து, நிழல் ரவி, நியா­மத்­துல்லா ஹாதி, அப்­துல் நாசிர் ஆகிய மூவரும் கைதாகினர்.

குறிப்புச் சொற்கள்