சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 கோடி மதிப்பிலான 4 கிலோ 800 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தத் தங்கத்தை கடத்துவதற்கு உதவி புரிந்த விமான நிறுவனப் பொறியாளர் உட்பட மூவரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் நால்வரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறப்பு விமானத்தில் வந்த பயணி ஒருவர் கழிவறைக்கு சென்றுவிட்டு வந்த சிறிது நேரத்தில் இளைஞா் ஒருவா் உள்ளே சென்றுவந்தாா்.
இதைக் கண்ட சுங்கத்துறை அதிகாரிகள், இளைஞரிடம் விசாரித்தபோது, அவர் விமான நிலையத்தில் கணினிப் பொறியாளராகப் பணியாற்றும் நிழல் ரவி, 29, என்பது தெரியவந்தது.
அவரிடம் சோதனை செய்தபோது இரண்டு பொட்டலங்களில் 27 தங்கக்கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
துபாயில் இருந்து வந்த சென்னையைச் சோ்ந்த நியாமத்துல்லா ஹாதி, 35, என்பவா், கடத்தல் தங்கத்தை வெளியே கொண்டு வந்து தரும்படி கோரி, கழிவறையில் வைத்ததாகவும் அதை தான் எடுத்து வெளியே செல்ல இருந்ததாகவும் கூறினாா்.
இதையடுத்து நியாமத்துல்லா ஹாதியை சுங்கத் துறை அதிகாரி கள் கைது செய்து 3 கிலோ 200 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் மற்ெறாரு சம்பவத்தில் துபாயில் இருந்து வந்த அப்துல் நாசிர் உள்பட ஐவரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் 1 கிலோ 600 கிராம் தங்கத்தைக் கைப்பற்றினர்.
இதையடுத்து, நிழல் ரவி, நியாமத்துல்லா ஹாதி, அப்துல் நாசிர் ஆகிய மூவரும் கைதாகினர்.

