தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் மட்டுமே கிருமித்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு பதிவாகி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் மீண்டும் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. 13 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் இந்த கிருமி பாதிப்பு பதிவாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் 8,867 பேர் கொரோனா கிருமிப் பரவலுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 1,005 பேருக்கு கிருமி பாதிப்பு உறுதி யானது. இதனால் பாதிக்கப்பட்ட வர்களின் மொத்த எண்ணிக்கை 815,175 பேராக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த 1,074 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கையும் 794,228 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இத்தொற்றால் 11 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 12,080 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துைற தகவல் வெளியிட்டுள்ளது.

