அரசியல் பாதையிலிருந்து ரஜினிகாந்த் பின்வாங்கியதன் தொடர்பில் தலைவர்கள் கருத்து

அரசியல் பாதையிலிருந்து ரஜினிகாந்த் பின்வாங்கியதன் தொடர்பில் தலைவர்கள் கருத்து

2 mins read
623eb008-aa68-49f4-94b3-1a303dd68513
படம்: ஊடகம் -

கட்சி தொடங்­கப்­போ­வ­தாக நடி­கர் ரஜி­னி­காந்த் இம்­மா­தத் தொடக்­கத்­தில் அறி­வித்­தி­ருந்­தார். பின்­னர் கட்சி தொடங்­கு­வ­தாக இல்லை என்று தமது உடல்­நி­லை­யைக் கார­ணங்­காட்டி கூறி­விட்­டார். அவ­ரது இம்­மு­டிவு குறித்து தமி­ழக அர­சியல் தலை­வர்­கள் உட்­பட பலர், தங்­க­ளின் உணர்­வு­க­ளை­யும் கருத்து­க­ளை­யும் வெளிப்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

அவ்­வ­ரி­சை­யில் தமிழ் மாநில காங்­கி­ரஸ் கட்­சித் தலை­வர் ஜி.கே.வாசன், "ரஜி­னி­காந்த் உடல்­நலத்­து­டன் வாழ வேண்­டும். புதிய கட்சி குறித்து அறி­விப்பு வரும் என்று மக்­கள் எதிர்­பார்த்­துக் காத்­தி­ருக்­கும் நிலை­யில், உடல்­நிலை சரி­யில்லை என்ற கார­ணம் ஏற்­புடை­யது. நாட்­டின் நன்மை கருதி மக்­க­ளுக்கு நல்­லது செய்­ப­வர்­களோடு ரஜி­னி­காந்த் துணை­நிற்க வேண்­டும்," என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

துக்­ளக் இத­ழா­சி­ரி­யர் குரு­மூர்த்தி, "தமக்கு உடல்­ந­லக் குறைவு ஏற்­பட்­டதை அடுத்து தாம் எடுத்­துள்ள முடி­வைப் பற்றி ரஜினி­காந்த் என்­னி­டம் கூறி­னார். அம்­மு­டிவு தவிர்க்க முடி­யாத ஒன்றே. இருப்­பி­னும் அவர் வெளி­யிட்ட அறிக்­கை­யில், தாம் அர­சி­ய­லில் நேர­டி­யாக ஈடு­ப­டா­மல், தமி­ழக மக்­க­ளுக்­குச் சேவை செய்­வேன் என்று கூறி­யி­ருக்­கி­றார். 1996ஆம் ஆண்­டில் நடந்­தது போல் அவர் தமி­ழக அர­சி­யலில் தாக்­கம் ஏற்­படுத்­து­வார் என்­பதே எனது கணிப்பு," என்று டுவிட்­ட­ரில் பதி­விட்­டி­ருந்­தார்.

"ரஜினி உடல்­நிலை தேறி நீண்­ட­கா­லம் வாழ வேண்­டும். அவ­ரின் உடல்­நிலை மோச­மாக இருந்த நிலை­யி­லும் சில­ரின் தூண்­டு­த­லால் அவர் கட்சி தொடங்க நினைத்­திருந்­தார். உடல்­நிலை கார­ணங்­களுக்­காக அவர் அர­சி­ய­லை­விட்டு, தள்ளி நிற்­பது நல்­ல­து­தான். ரஜினி­காந்த் ஹைத­ரா­பாத்­தில் சிகிச்சை பெறும்­போ­து­கூட உடல்­நி­லை­யில் கவ­னம் செலுத்­து­மாறு ஸ்டா­லின் ரஜி­னி­காந்­தி­டம் கூறி­யி­ருந்­தார்," என்று தி.மு.கவைச் சேர்ந்த பொன்­முடி தெரி­வித்­தி­ருந்­தார்.

அர­சி­யல் விமர்­ச­கர் சுமந்த் சி ராமன் தமது டுவிட்­டர் பக்­கத்­தில், "கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக ரஜினி மக்­கள் மன்­றத்­தில் பணி­யாற்­றி­ய­வர்­க­ளுக்­காக வருந்­து­கிறேன். தங்­க­ளின் தலை­வ­ரது வார்த்­தையை நம்­பி­ய­வர்­க­ளுக்­கும் வருந்­து­கி­றேன். அவ­ரின் ரசி­கர்­கள், பொது­மக்­கள், இது­வரை அவ­ரது பேச்சை நம்­பிய எண்­ணற்­ற­வர்­க­ளுக்­கும் வருந்­து­கி­றேன். வணங்­கிய ஒரு­வர், ரசித்த ஒரு­வர், இப்­படி பல­வீ­ன­மு­டை­ய­வர் என்­பதை உண­ரும்­போது அது வலி­ தரும் ஒன்றே," என்று பதி­விட்­டார்.

தனது உடல்­நி­லைக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்­த­து­டன் எந்த ஒரு வறட்டு கௌர­வ­மும் பார்க்­காது இப்­படி ஒரு துணிச்­ச­லான முடிவை அவர் எடுத்­தி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது என்று குறிப்­பிட்­டி­ருந்­தார் வி.சி.க தலை­வர் திரு­மா­வ­ள­வன்.

ரஜி­னி­காந்­தின் சகோ­த­ரர் சத்­தி­ய­நா­ரா­ய­ணன், "அவ­ரின் உடல்­நிலை நன்­றாக இருந்­தால் போதும். அவர் அர­சி­ய­லில் வந்து சாதிக்க வேண்­டும் என்­ப­தெல்­லாம் கிடை­யாது. உடல்­நிலை நன்­றாக இருந்­தி­ருந்­தால் கண்­டிப்­பாக வந்­தி­ருப்­பார். ஆனால், உடல்­நிலை கார­ண­மாக, கட்சி தொடங்க முடி­யா­மல் போனது," என்­றார்.

"ரஜி­னி­யைப் பொறுத்­த­வரை அவர் தமிழ்­நாட்­டின் ஓர் அங்­கம். ஒரு நல்ல மனி­தர். இதில் எந்த மாற்றுக் கருத்­தும் இல்லை. அவ­ரின் உடல்­நி­லை­யைக் கருத்­தில்­கொண்டு ஒரு முடி­வுக்கு வந்­திருப்­பது அவ­ரது சொந்த விருப்­பம். இந்த முடிவை விமர்­சிப்­ப­தற்கு மற்­ற­வர்­க­ளுக்கு உரிமை இல்லை," என்று கூறி­யி­ருந்­தார் பா.ஜ.கவின் சி.பி.ராதா­கி­ருஷ்­ணன்.

இதற்கிடையே சமூக வலைத்­தளங்­கள் மூலம் ரஜினி ரசி­கர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள், அவ­ரது முடிவை ஏற்­றுக்­கொண்டு அவர் தமது உடல்­நலனைக் கவ­னித்­துக்­கொள்­வதே முக்­கி­யம் என்று பதி­விட்டு வரு­கின்­ற­னர்.