சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு: குற்றவாளிக்கு இரட்டை தூக்குத் தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு: குற்றவாளிக்கு இரட்டை தூக்குத் தண்டனை

1 mins read
6d5c1c08-1707-42ce-a4d8-1a66ac08bc90
இரட்டை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ராஜா. படம்: ஊடகம் -

ஏழு வய­துச் சிறு­மி­யைப் பாலி­யல் வன்­கொ­டுமை செய்து, கொலை செய்த வழக்­கின் தொடர்­பில் குற்­ற­வா­ளிக்கு இரட்டை தூக்குத் தண்­ட­னையை வழங்கி புதுக்ே­காட்டை மக­ளிர் நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

புதுக்­கோட்டை மாவட்­டம், ஆவு­டை­யார் கோவில் அருகே உள்ள ஏம்­பல் கிரா­மத்­தைச் சேர்ந்த ஏழு வய­துச் சிறுமி கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி திடீ­ரென்று காணா­மல் போனார்.

பல­ரும் அவ­ரைத் தேடி வந்த நிலை­யில், சிறுமி அங்­குள்ள குளத்­தில் இருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்­டார். உடற்­கூறு ஆய்­வில் சிறுமியை பாலி­யல் வன்­கொ­டுமை செய்து, ­கொன்றது உறு­தி­யானது.

குற்றவாளியைத் தேடி வந்த போலிசாரின் பிடியில் பூக்­க­டை­யில் வேலை செய்­யும் ராஜா, 27, என்­பவர் சிக்கினார்.

போலிசாரின் விசாரணையில், சிறுமியைக் கடத்­திச் சென்று, கொன்றதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து ராஜாவை சிறை­யில் அடைத்­த­னர்.

கடந்த சில மாதங்களாக புதுக்­கோட்டை மாவட்ட மகிளா நீதி­மன்றத்தில் இந்த வழக்கின் விசா ரணை நடந்து வந்தது.

இந்­தச் சம்­ப­வம் நடந்த ஆறு மாதத்­துக்­குள் குற்­ற­வா­ளி சாமு­வேல் என்ற ராஜாவுக்கு இரட்டைத் தூக்­குத் தண்­ட­னை­யும் ஓா் ஆயுள் சிறைத் தண்­ட­னை­யும் விதித்து மகளிா் நீதி­மன்­ற நீதி­பதி சத்­யா செவ்­வாய்க்கிழமை தீர்ப்­ப­ளித்­தார்.

சிறுமியைப் பலாத்காரம் செய்ததற்கும் சிறுமியைக் கொன்ற தற்கும் இரண்டு மரண தண்டனை கள் விதிக்கப்பட்டன.

அத்துடன், சிறுமியைக் கடத்திச் சென்ற குற்றத்திற்காக அவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்ட னையும் விதிக்கப்பட்டது.